மின் வாகனங்கள் பதிவு அதிகரிப்பு: என்ன காரணம்?

Published On:

| By Kavi

தெலங்கானாவில் இதுவரை இல்லாத அளவில், கடந்த 43 நாட்களில் 4,251 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா மாநில அரசு, ‘தெலங்கானா மின்சார வாகனம் மற்றும் ஆற்றல் சேமிப்புக் கொள்கை 2020-2030’-ஐ அறிமுகப்படுத்திய பிறகு, மாநிலத்தில் மின்சார வாகனங்களின் பதிவு படிப்படியாக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மின்சார வாகன உரிமையாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் இதில் அடங்கியுள்ள நிலையில், 2026 டிசம்பர் 31-ம்  தேதி வரையான, இரண்டு ஆண்டுகளுக்கான சாலை வரி மற்றும் மின்சார வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்திலிருந்து 100 சதவிகிதம் விலக்கு அளிக்கப்படுகிறது.

எனவே இந்த ஆண்டு, மாநிலத்தில் 78,862 புதிய மின்சார வாகனங்கள் பதிவாகி உள்ளது. இது முந்தைய ஆண்டு 52,134 ஆக இருந்தது.

ADVERTISEMENT

அதே வேளையில், இந்த ஆண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்களுடன் அனைத்து வகையான மின்சார வாகனங்களின் பதிவும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.    

கடந்த ஒரு மாதத்தில் 3,704 இருசக்கர வாகனங்களும்,138 மூன்று சக்கர வாகனங்களும் பதிவான நிலையில், முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் முறையே 1,800 மற்றும் 30 ஆக இருந்தது. கடந்த ஜூலை மாதம் மாநில அரசு அனைத்து சலுகைகளையும் திரும்பப் பெற்ற பிறகு, மாநிலத்தில் மின்சார வாகனங்களின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் இது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

கடந்த மாதத்தில் 1,008 மின்சார கார்களின் பதிவான நிலையில், இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 345 வாகனங்கள் பதிவானது.

தற்போது, தெலங்கானாவில் 1.3 லட்சம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 12,765 கார்கள் உள்பட 1.7 லட்சம் மின்சார வாகனங்கள் உள்ளன.

இதே நிலை தொடர்ந்தால், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் 60,000 புதிய மின்சார வாகனங்கள் இணையும் என்ற நிலையில், இது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சாலை வரி மற்றும் மின்சார வாகனங்களுக்கான பதிவில் இருந்து விலக்கு அளிக்கும் தெலங்கானா அரசின் முடிவு தொடருமானால் இந்த ஆண்டு மின்சார வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று டீலர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: குஞ்சாலாடு! 

டாப் 10 செய்திகள்: புத்தாண்டு கொண்டாட்டம் முதல் மத்திய அமைச்சரவை கூட்டம் வரை!

நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை… மகளை இழந்த துக்கம் காரணமா?

விமர்சனம்: பரோஸ்!

பாலியல் வன்கொடுமைகளின் வேர்கள் வெகு தொலைவில் இருக்கின்றன!

ஹெல்த் டிப்ஸ்: கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிப்பது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share