திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் ஐ.டி ரெய்டு!

Published On:

| By christopher

Income Tax department raid in Thirumavalavan's house

விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் தங்கி இருக்கும் வீட்டில் இன்று (ஏப்ரல் 9) சுமார் 2 மணி நேரமாக திடீர் சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் சிதம்பரம் தனி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், கடந்த ஒரு வாரமாக மக்களை சந்தித்து தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

ADVERTISEMENT

இதற்காக சிதம்பரம் கண்ணங்குடி பகுதி புறவழிச்சாலை அருகே இருக்கும் முருகானந்தம் என்பவரின் வீட்டில் அவர் தங்கியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் இன்று மாலை 6 மணியளவில் 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனை 8 மணிக்கு முடிவடைந்தது. எனினும் அங்கிருந்து எந்தவொரு ஆவணங்களும் சிக்காத நிலையில் அவர்கள் திரும்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

விஜய் சேதுபதியின் ’மகாராஜா’ ரிலீஸ் தேதி இதுதானா?

எந்த முகத்துடன் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்?: ஸ்டாலின் கேள்வி!

வெள்ள பாதிப்புகளை களைய முன்னுரிமை : சென்னையில் மோடி ரோடுஷோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share