தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இட்லிகடை மூலம் விநியோகஸ்தராக திரையுலகில் அறிமுகமாகிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி.
வொண்டர்பார்ஸ் மற்றும் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், ராஜ்கிரண் ஆகியோர் நடித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் சாட்டிலைட் உரிமை கலைஞர் தொலைக்காட்சி விற்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.
இதன்மூலம் தனுஷின் இட்லிகடை படத்தின் வழியாக விநியோகஸ்தராக திரையுலகில் அறிமுகமாகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை நடிகர் தனுஷ் இன்று (செப்டம்பர் 3) வெளியிட்டுள்ளார்.
அதில் ”ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் இட்லி கடை திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. இன்பன் உதயநிதியின் புதிய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!” என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிப்பு பயிற்சி பெறும் இன்பன் உதயநிதியின் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனால் நடிகராக அவர் திரையுலகில் அறிமுகவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் விநியோகஸ்தராக களமிறங்கியுள்ளார்.
