ஆகஸ்ட் 1 வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியுடுகள் சென்செக்ஸ் 82,129.49 புள்ளிகள் என்கிற புதிய உச்சத்தை அடைந்து வர்த்தக முடிவில் 126 புள்ளிகள் உயர்வுடன் 81,867 புள்ளியிலும், நிஃப்டி 25,078.30 என்கிற உச்சத்தை அடைந்து வர்த்தக இறுதியில் 25,010 புள்ளிகளுடன் வியாழக்கிழமை வர்த்தகத்தில் காளையின் ஆதிக்கத்துடன் முடிவடைந்தது.
FMCG, Pharma, Oil & Gas, and select financial services managed துறை சார்ந்த பங்குகள் விலை உயர்ந்தும். Media, Auto, Realty மற்றும் PSU Bank உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகள் 1.7% வரை சரிவை கண்டன.
நிஃப்டியில் பட்டியலிடப்பட்ட முதல் 50 நிறுவனங்களில் 28 நிறுவன பங்குகள் விலை உயர்ந்து லாபத்தைக் கொடுத்தன. மேலும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 4 சதவீதம் வரை உயரந்து முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் லாபத்தை அளித்தன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் விற்பனை செய்யப்பட்ட 15068 யூனிட்களை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி உள்ளிட்ட வாகன விற்பனை 13,928 என்கிற எண்ணிக்கையில் குறைந்துள்ளதாக தெரிவித்த நிலையில் வியாழக்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்தில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்கு 3.94 சதவிகிதம் சரிந்து 246.95 ரூபாயில் முடிவடைந்தது .
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 80,633 என்கிற வாகன எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் 10.7% சரிந்து 71,996 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாக அறிவித்த நிலையில், கடந்த 6 நாட்களாக தொடர் விலை உயர்வை கண்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு வியாழக்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்தில் வர்த்தகத்தில் 1.56 சதவீதம் சரிந்து 1,138.25 என்ற குறைந்தபட்சத்தை எட்டியது.
இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான Hero MotoCorp இன் நிதிச் சேவைப் பிரிவான HerofinCorp இந்திய பங்குச் சந்தையில் நுழைய உள்ளதாகவும், ஆரம்ப பொது வழங்கல் (IPO) மூலம் சுமார் 3,668 கோடி மூலதனச் சந்தை நிதியை திரட்டவுள்ளதாக வியாழக்கிழமை அன்று பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் பூர்வாங்க ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.
அதானி நிறுவனத்தின் துணை நிறுவனமான Adani Energy Solutions AESL நிறுவனம் QIP திட்டம் மூலமாக சுமார் பங்கு ஒன்று 1027.11 ரூபாய் விலையில் 100 கோடி பங்குகளை QIP மூலதன நிதி திரட்ட அறிவிக்கப்பட்ட நிலையில். எதிர்பார்த்ததை விட 6 மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து வியாழக்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்தில் அதானி எனர்ஜி சொல்யூஷன் நிறுவன பங்கு 9% விலை உயர்ந்து 1,236.70 ரூபாயில் முடிவடைந்தது.
அதானி நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனமான அதானி போர்ட்ஸ் முதல் காலாண்டின் நிகர லாபம் 47% உயர்ந்து 3017 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ் பங்கு 1.21% உயர்ந்து 1588.70 ரூபாயில் முடிவடைந்தது.
பொதுத்துறை வங்கிகியான பேங்க் ஆஃப் பரோடா ஜூலை 31 அன்று முதல் காலாண்டு முடிவுகளை அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் 9.5% உயரந்து 4458 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்தில் BOB பங்கு 258 ரூபாய் வரை உயர்ந்து வர்த்தக இறுதியில் 0.95% சரிந்து 251.25 ரூபாயில் முடிவடைந்தது.
ஆகஸ்ட் 2 வெள்ளிக்கிழமை வார இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் கடும் சரிவுடன் தொடங்கியது. முறையே சென்செக்ஸ் 650 புள்ளிகள் குறைந்தும் நிஃப்டி 200 புள்ளிகளுக்கு மேல் சரிவு சந்தித்தன.
வெள்ளிக்கிழமை காலை முதல் அமர்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கு 4% வரை சரிவை சந்தித்து வருகிறது. ITC மற்றும் ZOMATO நிறுவன பங்குகள் விலை உயர்ந்து வருகிறது.
துறை வாரியாக ஆட்டோமொபைல் மற்றும் இரும்பு துறை சார்ந்த பங்குகள் சரிவை சந்தித்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மணியன் கலியமூர்த்தி
ஷாக் கொடுக்கும் தங்கம் விலை… ரேட் எவ்வளவு தெரியுமா?
வயநாடு நிலச்சரிவு : கேரள அரசுக்கு விசிக சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி!