புதிய தடுப்பணைகள்: ஒன்றிய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை!

Published On:

| By Minnambalam

ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுதல், முக்கிய ஆறுகளில் ஓடும் உபரிநீரைப் பயன்படுத்தி அருகிலுள்ள நீர்நிலைகளில் நிரப்பி நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்குதல் போன்ற சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசுடன் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல் ஜீவன் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தலைமையில் நேற்று (அக்டோபர்1 3) சென்னையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், “தமிழகத்தில் மொத்தம் உள்ள 124.94 லட்சம் வீடுகளில்,

ADVERTISEMENT

69.50 லட்சம் (55.63%) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது தேசிய சராசரியான 53.96 சதவிகிதத்தை விட அதிகம்.

இந்த ஆண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுக்கு தமிழகத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கு 12.10 லட்சம் ஆகும்.

ADVERTISEMENT

இலக்கை விட அதிகமாக 16.25 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு சாதனை எண்ணிக்கையை அடைந்துள்ளது.

2022-23ஆம் ஆண்டு இலக்கு 28.48 லட்சம். இதுவரை 16.51 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல் ஜீவன் இயக்க திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.

நதி நீரினை உபயோகிக்கும் மாநிலங்களில், தமிழகம் கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலமாகும்.

எனவே, குடிநீர் திட்டங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்ய சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி நிலத்தடி நீரை மேம்படுத்த சிறப்புத் திட்டத்தைக் கோரவும், ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுதல்,

முக்கிய ஆறுகளில் ஓடும் உபரிநீரைப் பயன்படுத்தி அருகிலுள்ள நீர்நிலைகளில் நிரப்பி நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்குதல் போன்ற சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-ராஜ்

70 விழாக்களில் திரையிட்டு 46 விருதுகளை வென்ற மாமனிதன்!

கிச்சன் கீர்த்தனா : கோதுமை ரவை இட்லி!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share