“காண்டம் பயன்பாடு தற்போது மக்களிடையே அதிகரித்து வந்தாலும், கடைக்குச் சென்று காண்டம் வாங்குவதற்கு இன்றும் தயங்குபவர்கள் பலர். ஆனால், பாதுகாப்பான செக்ஸ் வாழ்க்கைக்கு கேடயம் அதுதான் என்பதால், இதில் தயக்கம் கூடாது’’ என்கிற செக்ஸாலஜிஸ்ட்ஸ், காண்டம் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி பகிர்கிறார்கள்…
“நம்பகமான பிராண்டில் கிடைக்கும் தரமான காண்டம்களை மட்டும் வாங்குங்கள். காண்டம் வாங்குவதற்கு முன்னால், பாக்கெட்டில் அதன் எக்ஸ்பயரி தேதியை கவனியுங்கள். குறிப்பாக, அவை டேமேஜ் ஆகாமல் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டியது மிக அவசியம்.
தவறான முறையில் காண்டம் அணிந்தால் ஆணுறுப்பில் வலியும், அசௌகர்யமும் உண்டாகலாம். எனவே, அதைச் சரியாக அணியவேண்டியது முக்கியம்.
அதை ஆணுறுப்பில் போடும்போது முதலில் கீழ்ப்பகுதியில் ஃபிக்ஸ் செய்து, பின்னர் மெதுவாக ரோல் பண்ண வேண்டும். ரோல் பண்ணும்போது ஒருவேளை கிழிந்துவிட்டால் வேறொன்றை எடுத்துப் பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்தியதை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
பொதுவாக, ஸ்மால் சைஸ், மீடியம் சைஸ் மற்றும் பிக் சைஸ் போன்ற அளவுகளில் காண்டம்கள் கிடைக்கின்றன. அவரவர் சைஸுக்கு ஏற்ப வாங்க வேண்டும்.
வாங்கியதை பர்ஸ் போன்றவற்றில் வைத்துக் கொள்ளக்கூடாது. பர்ஸில் உள்ள மடிப்பின் காரணமாக காண்டம் பழுதாக வாய்ப்புள்ளது என்பதால் பாதுகாப்பான இடத்தில் வைத்து, எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.
காண்டம்… பிளாஸ்டிக், ரப்பர் போன்றவற்றில் உருவாக்கப்படுவதால் சிலருக்கு அரிதாக அலர்ஜியை உண்டாக்கும். எனவே, காண்டம் அலர்ஜி உள்ள நபர்கள் இதைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
எடுத்துக்கட்டாக, லேடக்ஸ் மெட்டீரியல் மூலம் உருவான காண்டம் அலர்ஜியை உண்டாக்குகிறது என்றால் அதைத் தவிர்த்து விட்டு பாலியூரித்தின் போன்ற பிற காண்டம்களைத் தேர்ந்தெடுக்கலாம்” என்று பரிந்துரைக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை முதல் ஜல்லிக்கட்டு முன்பதிவு ஆரம்பம் வரை!
கிச்சன் கீர்த்தனா : ஸ்வீட் கார்ன் – வரகரிசி மசாலா பொங்கல்
மார்க்சிஸ்ட் புதிய செயலாளர் பெ.சண்முகம்… ஸ்டாலின், விஜய் வாழ்த்து!
ஹெல்த் டிப்ஸ்: காதுக்குள் புகுந்த பூச்சி…. விரட்டுவது எப்படி?
பியூட்டி டிப்ஸ்: சருமம் பளபளக்க… வீட்டிலேயே செய்யலாம் நலங்கு மாவு!