பியூட்டி டிப்ஸ்: ஆரி வொர்க் பிளவுஸ்… கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

Published On:

| By Kavi

Important things to note about Aari work blouse

புடவை என்றாலே பெண்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அதற்கு மேட்ச்சாக வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்படும் ஆரி வொர்க் பிளவுஸ்தான், அதுதான் சிறப்பானதும்கூட.

பிளவுஸில் ஆரி வொர்க் செய்வதற்கு சில நாட்கள் எடுக்கும் என்பதால், ஏற்கெனவே ஆரி வொர்க் செய்யப்பட்ட பிளவுஸ் துணியை வாங்கி தங்களின் புடவைக்கு ஏற்ற கலரில் சிலர் தைத்துக் கொள்கின்றனர். ஆனால், இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.

அதாவது, ஏற்கெனவே ஆரி வொர்க் செய்யப்பட்ட துணியில், அதாவது மெட்டீரியலில் அவர்களே கழுத்தின் முன்பகுதி, பின்பகுதி, ஷோல்டர் போன்றவற்றின் அளவுகளை தோராயமாக வைத்து விடுவார்கள். அதை நாம் அப்படியே பின்பற்றி பிளவுஸாக தைக்க வேண்டும்.

அளவு பொருந்தி வராதபோது ஒருவேளை கழுத்தின் அளவுக்கு ஏற்றாற்போல ஆரி வொர்க் செய்யப்பட்ட பகுதியைக் கட் பண்ணித் தைக்க முயன்றால், கட் பண்ணும்போதே ஆரி வொர்க் அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்றாக உருவிக்கொண்டு வந்துவிடும்.

எனவே, இந்தச் சிக்கலுடன் ஒப்பிடுகையில் ஆரி வொர்க் செய்யப்பட்ட ரெடிமேட் பிளவுஸை வாங்கிப் பயன்படுத்துவது எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

புடவை மிகவும் கிராண்ட்டாக இருந்தால் சிம்பிளாக டிசைன் செய்யப்பட ஆரி வொர்க் பிளவுஸை தேர்ந்தெடுக்கலாம். அதுவே, புடவை கொஞ்சம் சிம்பிளாக இருந்தால் வேலைப்பாடுகள் நிறைந்த ஆரி வொர்க் பிளவுஸை அணியலாம்.

பொதுவாக, மிகவும் ஹெவியாக ஆரி வொர்க் செய்யப்பட்ட பிளவுஸை ரெடிமேடாக வாங்குவதைத் தவிர்த்திடுங்கள்.

ஏனென்றால், அது அளவு சரியில்லை என்றால் கட் பண்ணி ஆல்டர் செய்ய நேர்ந்தால், அதில் லாக் செய்யப்பட்டுள்ள பீட்ஸ், ஜர்தோசி ஆகியவை கையோடு வந்துவிடும் என்பதால்.

மொத்தத்தில், ஆரி வொர்க்கை பொறுத்தவரை ரெடிமேட் மெட்டீரியல், ரெடிமேட் பிளவுஸை விட உங்கள் அளவுக்கு ஏற்ப கஸ்டமைஸ்டாக தைக்கப்படும் ஆரி வொர்க் பிளவுஸுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பது சிறந்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: உங்கள் வீட்டில் ‘ஹேப்பி குக்கிங்’ அமைய இதை ஃபாலோ பண்ணுங்க!

ஓடிபி ஸ்கேன்… இனி வங்கி குறுஞ்செய்தி வர தாமதாமாகும்: டிராய் எடுத்த நடவடிக்கை!

தவெக மாநாடு: குடிநீர், மெடிக்கல் கேம்ப், செல் டவர்… முழு விவரம் இதோ!

மதுரை மழை – போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை : ஸ்டாலின் பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share