தெற்கு ரயில்வேயில் பல்வேறு இடங்களில் பரமாரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் ரயில் சேவைகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Important Notice for Train Passengers
பாலக்காடு- கோவை டவுன்
பாலக்காடு டவுனில் இருந்து காலை 7.30 மணிக்கு கோவைக்கு புறப்படும் ரயில் (66606) ஜூன் 6,7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பாலக்கோடு டவுன்- காஞ்சிக்கோடு இடையே மட்டும் பகுதி அளவு ரத்து செய்யப்படுகிறது.
இதனால் கோவைக்கு காஞ்சிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.50 மணிக்கு ரயில் இயக்கப்படும்.
சொரனூர் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு காலை 8.20 மணிக்கு புறப்படும் ரயில் (56604) வரும் ஜூன் 7-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும்.
திருச்சி- காரைக்கால்
திருச்சியில் இருந்து காலை 8.35 மணிக்கு புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலுக்கு இயக்கப்படும் MEMU ரயில் (76820) இன்று ஜூன் 5-ந் தேதி முதல் ஜூன் 8-ந் தேதி வரை திருவாரூர் வரை மட்டும் இயக்கப்படும்.

இதேபோல காரைக்காலில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு திருச்சிக்கு இயக்கப்படும் MEMU ரயில் (76819) இன்று முதல் ஜூன் 8-ந் தேதி வரை திருவாரூரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும். காரைக்கால்- திருவாரூர் இடையேயான ரயில் சேவை ரத்து செய்யப்படும்.
ஈரோடு- செங்கோட்டை
ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் ரயில் (16845) ஜூன் 7, ஜூன் 9, ஜூன் 12, ஜூன் 14, ஜூன் 16 ஆகிய தேதிகளில் கரூரில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும்.
செங்கோட்டையில் இருந்து ஈரோடுக்கு மாலை 5.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் (16846) ஜூன் 7, ஜூன் 9, ஜூன் 12, ஜூன் 14, ஜூன் 16 ஆகிய தேதிகளில் கரூர் வரை மட்டும் இயக்கப்படும். இந்த நாட்களில் கரூர்- ஈரோடு இடையேயான ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும்.

திருச்சியில் இருந்து பாலக்காடுக்கு டவுன் செல்லும் ரயில் (16843) ஜூன் 12, ஜூன் 14 தேதிகளில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த நாட்களில் கரூர்- பாலக்காடு இடையே ரயில் சேவை ரத்து செய்யப்படும்.
