ADVERTISEMENT

அக்.20 முதல் அக்.24 வரை.. சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Mathi

Chenai Metro

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 20.10.2025 முதல் 24.10.2025 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளதாவது:

ADVERTISEMENT

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான இரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.

பராமரிப்பு அட்டவணை மற்றும் மெட்ரோ இரயில் சேவை மாற்றங்கள் பின்வருமாறு:

ADVERTISEMENT
  • பராமரிப்பு பணி காலம்: 20.10.2025 முதல் 24.10.2025 வரை.
  • காலை 05:00 மணி முதல் 06:30 மணி வரை மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் நேரங்கள்:
  • மெட்ரோ இரயில்கள் காலை 05:00 மணி முதல் 06:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
  • காலை 06:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கம் போல் எவ்வித மாற்றமும்மின்றி இயங்கும்.

இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

பராமரிப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

ADVERTISEMENT

ரயில் பாதை பராமரிப்புப் பணிகள், இரயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்திற்கு மிகவும் அவசியம். பயணிகள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பராமரிப்புப் பணிகளால் ஏற்படும் சிரமத்திற்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருந்துகிறது.

பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது http://chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

பாதுகாப்பான மற்றும் திறமையான மெட்ரோ இரயில் சேவையை உறுதிப்படுத்த, அனைத்துப் பயணிகளும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share