திருச்சி சிவா VS எல். முருகன்: ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மானம்?

Published On:

| By Mathi

Dehi GR Swaminathan

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகள் குறித்து பரிசீலனை செய்வோம் என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவுகள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

ADVERTISEMENT

தமிழக அரசுக்கு நெருக்கடியைத் தரும் வகையில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுகளைப் பிறப்பித்து வரும் நிலையில் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினும், ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ள திமுகவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக மின்னம்பலத்தில் நாம் பதிவு செய்திருந்தோம்.

ADVERTISEMENT

இதனை உறுதி செய்யும் வகையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா எம்.பி, ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்யும் இம்பீச்மெண்ட் நடவடிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வோம். இப்படிப்பட்ட நீதிபதிகள், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் அளவுக்கு தீர்ப்புகளை தருகிறவர், ஏற்கனவே இரு நீதிபதிகள் தந்த தீர்ப்பை நிராகரிக்கிறவர்.. ஏதோ ஒரு நோக்கத்துடன் செயல்படுவதாக தோன்றுகிறது. அப்படியான நிலையில் இம்பீச்மெண்ட் என்பது நாடாளுமன்ற நடைமுறையில் உள்ள ஒன்றுதான். அதை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும். எங்களது தலைமையின் ஆலோசனைப்படி நாங்கள் செயல்படுவோம் என்றார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன்

ADVERTISEMENT

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என கூறப்படுவது பற்றி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த எல். முருகன், “இது எல்லாம் அரசியலுக்காக பொது மேடைக்காக பேசுவது. நாடாளுமன்றத்தில் அவங்க எத்தனை எம்.பி. இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியும்.. நாங்க நாடாளுமன்றத்துல எவ்வளவு எம்.பிக்கள் இருக்கிறோம் என்பதும் தெரியும்.. எங்களது வலிமை என்ன என்பது பொதுமக்களுக்கும் தெரியும். இந்தியா கூட்டணி பீகாரில் மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இந்தியா கூட்டணியே இருக்குமா? என்றே தெரியாது. அதனால இம்பீச்மெண்ட் என்பது எல்லாம் நடக்காத ஒன்று. அரசியலுக்காக, செய்தியாளர்களின் பேட்டிக்காக அப்படி சொல்லி இருப்பார்கள்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share