பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவிற்கு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. IMF Impose 11 New Conditions for Pakistan
அதிலும் குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளில் பாகிஸ்தானின் பொருளாதாரம் மீண்டெழ முடியாத அளவிற்குக்கு சிக்கலை சந்தித்து வருகிறது. சராசரியாக பாகிஸ்தானின் பணவீக்கம் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதனால் பாகிஸ்தானின் மக்கள் அடிப்படை தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கூட மிகப் பெரிய அளவில் தள்ளாடுகிறார்கள்.
நாட்டினுடைய மொத்த வெளிநாட்டு கடன் 36 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் சீனாவின் கடனுதவி மட்டும் 10 சதவீதம் வரை உள்ளது.
தற்போது பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 8 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. IMF Impose 11 New Conditions for Pakistan
கடந்த இரண்டு ஆண்டுகளின் தரவுகள் அடிப்படையில் பாகிஸ்தானின் வர்த்தக பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் உள்ளது.
2023 ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் ஏற்றுமதி 28.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. அதுவே இறக்குமதி 55.3 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதில் வர்த்தக பற்றாக்குறை 26.8 பில்லியன் அமெரிக்க டாலர்.
2024 ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் ஏற்றுமதி 30.1 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. அதுவே இறக்குமதி 58.2 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதில் வர்த்தக பற்றாக்குறை 28.1 பில்லியன் அமெரிக்க டாலர்.
இதனால் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது.
இதன் காரணமாக பாகிஸ்தானின் பண மதிப்பு மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
டாலருக்கு நிகரான பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு 252.82 ரூபாயாக உள்ளது.
இப்படி பாகிஸ்தானினின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவிற்கு வீழ்ச்சி அடைந்த காரணத்தினால் அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு சர்வேதச நாணய நிதியத்திடம் (IMF) தொடர்ந்து உதவிகளை கேட்டு வருகிறது.
2024 ஆம் ஆண்டு தரவுகளின் படி பாகிஸ்தான் இதுவரை சர்வதேச நாணய நிதியத்திடம் 6.1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனாக பெற்றுள்ளது.
பலமுறை இந்த கடன்களை அடைப்பதற்கு மேலும் கடன் வாங்கும் சூழல் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. IMF Impose 11 New Conditions for Pakistan
இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புக்கொண்டது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் மிகப்பெரிய விலை கொடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.
அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, அரசினுடைய நலத்திட்ட உதவிகளை நிறுத்துவது போன்ற பல்வேறு விதமான நடவடிக்கைகளை பாகிஸ்தான் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதித்தது.
இதனின் தொடர்ச்சியாக கடந்த மே 9ஆம் தேதி சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவியை வழங்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது என்ற அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்க இருக்கும் கடனுதவியை நிறுத்துமாறு இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இருப்பினும் பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை செய்துள்ளது. IMF Impose 11 New Conditions for Pakistan
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு தர இருக்கும் 1.1 பில்லியன் டாலர் கடனுக்கு சர்வதேச நாணய நிதியம் 11 நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில்,
2025-26 ஆண்டுக்கான பாகிஸ்தானின் பட்ஜெட் 17 லட்சம் கோடியாகவும், அதில் ஒரு லட்சம் கோடி பாகிஸ்தானின் மேம்படுத்தும் பணிகளுக்காக மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிலும் ஐ.எம்.எப் திட்டங்களின் இலக்குகளுடன் வடிவமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவிற்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் கால நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அமைப்பு வழிகாட்டுதல் படி வேளாண் வருமான வரிச் சட்டங்கள் மூலம் நான்கு அலகுகளாக செயல்படுத்தப்படும் என்ற மற்றொரு நிபந்தனையையும் விதித்தது. இதனை 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவிற்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் கால நிர்ணயிக்கப்பட்டுள்ளது. IMF Impose 11 New Conditions for Pakistan
சீர்திருத்த நடவடிக்கைகளை அடையாளம் காண, சர்வதேச நாணய நிதியத்தின் கீழ் ஒரு நிர்வாக செயல் திட்டத்தை வெளியிட பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவிற்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டு மக்களின் வாங்கும் சக்தியைப் அதிகரிப்பது மற்றும் நாட்டில் உள்ள பண வீக்கத்தை சரி செய்வது. இதனை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவிற்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2027க்குப் பிந்தைய நிதித்துறை உத்தியை ஒரு திட்டமாக உருவாக்கி வெளியிடவும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவிற்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசின் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் எரிசக்தி கட்டணங்களை பராமரிக்க, பாகிஸ்தான் அரசாங்கம் ஜூலை 1, 2025 க்குள் வருடாந்திர மின்சார கட்டண மறுசீரமைப்பு அறிவிப்பை வெளியிடும்.
பிப்ரவரி 15, 2026 க்குள் எரிசக்தி கட்டணங்களை செலவு மீட்பு மட்டங்களில் பராமரிக்க ஆண்டுக்கு இரண்டு முறை எரிவாயு கட்டணங்களை உயர்த்துவது குறித்த அறிவிப்பை வெளியிடுமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு உத்தரவு விடப்பட்டுள்ளது.
மே 2025 இறுதிக்குள் தொழில்துறை எரிசக்தி பயன்பாட்டை தேசிய மின்கட்டமைப்பிற்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு அவசர சட்டத்தை இயற்ற உத்தரவு விடப்பட்டுள்ளது.
கடன் சேவை கட்டணம் மீது அதிகபட்ச ஒரு யூனிட்டிற்கு ₹3.21 உச்சவரம்பை நீக்குவதற்கான ஒரு சட்டத்தையும் பாகிஸ்தான் அரசு நிறைவேற்ற வேண்டும்.
2035 ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தானின் சிறப்பு தொழில்நுட்ப மண்டலங்கள் மற்றும் பிற தொழில்துறை தொடர்பான அனைத்து சலுகைகளையும் முழுமையாக நிறுத்துவதற்காக நடத்தப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு ஒரு திட்டத்தையும் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. IMF Impose 11 New Conditions for Pakistan
ஜூலை 2025 இறுதிக்குள் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான பழைய பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகன இறக்குமதிகள் மீதான அனைத்து அளவு கட்டுப்பாடுகளையும் பட்டியலிடுவதற்கான மசோதாவை பாகிஸ்தான் சமர்ப்பிக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகள் பாகிஸ்தான் மேலும் கடனாளி நாடாக தொடர்வதற்கான சாத்திய கூறுகள் இருந்தாலும் பாகிஸ்தானிற்கு வேறு வழி இல்லை என்ற சூழல்தான் தற்பொழுது அதனுடைய பொருளாதார நிலை உள்ளது.
இவ்வளவு பொருளாதார நெருக்கடி சிக்கலுக்கு மத்தியில் தான் இந்திய எதிர்ப்பு என்ற அடிப்படையில் பாகிஸ்தானுடைய அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.
