ஃபெங்கல் புயல் எப்போது உருவாகும்? – வானிலை மையம் டேட்டஸ்ட் அப்டேட்!

Published On:

| By Selvam

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று (நவம்பர் 28) மாலை அல்லது நாளை (நவம்பர் 29) காலைக்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில்,  “தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 2 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து திரிகோணமலைக்கு சுமார் 110 கி.மீ தொலைவில் கிழக்கு – வடகிழக்கே நிலை கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நவம்பர் 30-ஆம் தேதி காரைக்கால் – மகாபலிபுரம் இடையே மணிக்கு 60 – 70 கி.மீ வேகத்தில் கரையை கடக்கக்கூடும். இன்று மாலை முதல் நாளை காலைக்குள் புயலாக வலுப்பெறக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காவி நாட் ஃபிட் ஃபார் மி… கொதித்தெழுந்த சீமான்

இணையவழி விளையாட்டுகளின் தீமைகள்: பள்ளிக்கல்வித்துறை நடத்தும் கட்டுரைப் போட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share