“மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறேன்”: டேவிட் மில்லர் உருக்கம்!

Published On:

| By indhu

மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறேன் என தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. எப்போதும் அரையிறுதிப் போட்டியோடு தொடரில் இருந்து வெளியேறும் என்று தென்னாப்பிரிக்கா அணி மீது இருந்த முத்திரையை எடுத்தெறிந்து இந்த உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை அந்த அணி முன்னேறியது.

இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில், டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள மிகக் கடினமாக இருப்பதாக தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறேன். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள மிகவும் கடினமாக உள்ளது.

கடந்த 2 நாட்களாக நான் எந்தமாதிரியான நிலையில் இருந்தேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தென்னாப்பிரிக்க அணியில் ஒருவராக இணைந்து அணியின் வெற்றிக்காக போராடியது பெருமையாக உள்ளது” என டேவிட் மில்லர் பதிவிட்டுள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலி… போலே பாபா தலைமறைவு!

ஓடிடியில் வெளியான “கருடன்”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share