ADVERTISEMENT

பொன்முடி மகனை விரட்டும் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு!

Published On:

| By christopher

Illegal money transfer case

சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும்,  எம்.பி.யுமான கவுதம சிகாமணி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Illegal money transfer case

கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில் தமிழக அரசின் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார் முன்னாள் அமைச்சர் பொன்முடி.

ADVERTISEMENT

அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்து முறைகேடு செய்ததாக பொன்முடி, அவரது மகனும், தற்போதைய கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது 2012 ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.

இது தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

ADVERTISEMENT

இதனை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஜூலை மாதம் அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த இந்த சோதனையை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

மேலும் சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பாக, கவுதம சிகாமணி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே.சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ் பிஸ்னஸ் ஹவுஸ் நிறுவனம்,

உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் ஆகஸ்ட் மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை 12 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு கடந்த மாதம் 24 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது நேரில் ஆஜரான கவுதம சிகாமணி, ராஜ மகேந்திரன், சதானந்தம், கோபிநாத் உள்ளிட்டோருக்கு குற்றபத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டது.

குற்றச்சாட்டுகள் பதிவிற்கு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கௌதம சிகாமணி நேரில் ஆஜராகாத நிலையில் அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணையை அடுத்த மாதம் தள்ளிவைக்க வேண்டும் என கோரினார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதி வாலண்டினா, ”நீண்ட நாள் விசாரணையை தள்ளிவைக்க முடியாது” என்று கூறி வழக்கு விசாரணை ஜனவரி 4 தேதிக்கு ஒத்திவைத்தார்.

குற்றச்சாட்டுகள் பதிவிற்கு குற்றசம்சாட்டபட்ட அனைவரும் அன்றைய தினம் நேரில் ஆஜாராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வரிப்பகிர்வு: உ.பி.யை விட 3 மடங்கு குறைவாக தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு!

சேர்ந்து சுத்தும் போதெல்லாம் உங்களுக்கு கண்ணு தெரியல?… வெளுக்கும் ரசிகர்கள்!

Illegal money transfer case

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share