மன அழுத்தத்தை எதிர்கொள்கிறேன்: இலியானா

Published On:

| By Manjula

ileana dcruz postpartum depression

மன அழுத்தத்தை எதிர்கொள்கிறேன் என, நடிகை இலியானா வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.

தமிழில் கேடி படத்தின் வழியாக அறிமுகமான நடிகை இலியானா, விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படம் மூலம் தமிழக ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானார்.

ADVERTISEMENT

யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 2023-ம் ஆண்டு தான் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து மைகேல் டோலன் என்பவரை கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் கரம் பிடித்தார்.

2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கோ பீனிக்ஸ் டோலன் என பெயர் சூட்டி இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், குழந்தை பிறந்த பின்னர் தான் மன அழுத்தத்தை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ”மகப்பேறுக்கு பின்னரான மனச்சோர்வு முற்றிலும் உண்மை. காரணமே இல்லாமல் குற்ற உணர்ச்சியில் தவிப்பேன். என்னுடைய கணவரும், மருத்துவர் குழுவும் என்னை நன்கு கவனித்து கொண்டனர்.

ADVERTISEMENT

குழந்தை பிறந்த பிறகு, இது போன்ற தீவிரமான உணர்ச்சிகளை நீங்கள் அனுபவிப்பீர்கள். நான் இன்னும் அதை அனுபவித்து வருகிறேன்,” என வெளிப்படையாக பேசியுள்ளார்.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள் 

இந்தியாவில் வின்பாஸ்ட் நிறுவனம் என்ட்ரி: தமிழகத்தில் 16,000 கோடி முதலீடு!

களைகட்டிய ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு… பல்சர் பைக் தட்டிச்சென்ற காளையர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share