இசைஞானி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இளையராஜாவுக்கு இன்று (ஜூன் 2) 81-வது பிறந்தநாள். அதனை முன்னிட்டு அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ஸ்டூடியோவில் இன்று காலையிலேயே ரசிகர்கள் குவிந்தனர். அவர்களை ஒவ்வொருவராக சந்தித்து அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து இளையராஜா பேசுகையில், “என் பிறந்தநாளுக்கு நீங்கள்தான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறீர்கள். ஆனால், என் மகளைப் பறிகொடுத்ததால் நான் இந்தப் பிறந்தநாளை கொண்டாடவில்லை. நன்றி” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி உடல்நலக்குறைவால் இலங்கையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா