”இன்றும் அம்மாவின் போட்டோவிற்கு ’டா டா’ காட்டி விட்டு தான் செல்கிறேன்” : இளையராஜா உருக்கம்!

Published On:

| By christopher

ilaiyaraaja shares memory about his mother and wife

தாயின் தாலாட்டு பாட்டு என்றாலும், பிரிவில் வாடும் சோக கீதங்கள் என்றாலும் இளையராஜாவின் இசையே இன்றும் மனதை ஆக்கிரமிக்கின்றன. ilaiyaraaja shares memory about his mother and wife

லண்டனில் தனது சிம்பொனி அரங்கேற்றம் செய்து இசையுலகின் பாராட்டுகளை தற்போது பெற்று வருகிறார் இளையராஜா.

இந்த நிலையில் சமீபத்தில் தந்தி தொலைக்காட்சி தொகுப்பாளர் அசோக வர்ஷினிக்கு அளித்த பேட்டியில், தனது மறைந்த தாயார் குறித்தும், மனைவி குறித்தும் உருக்கமுடன் பேசியுள்ளார்.

இசை ஞானி – பெயர் சூட்டிய கலைஞர் ilaiyaraaja shares memory about his mother and wife

இளையராஜா பேசுகையில், “அம்மா மாதிரி யாருமே கிடையாது. எனக்கு ‘ஞான தேசிகன்’ என்று பெயர் வைத்தது அப்பாதான். அவர் ஜோதிடம் பார்ப்பார். என்னுடைய ஜோதிடத்தை பார்த்துவிட்டு, ‘இவன் தான் நம்ம வீட்டுல பெரிய ஆளா வருவான். நீ எல்லாத்தையும் பார்ப்பாய். ஆனால் நான் இருக்கமாட்டேன்” என்று அம்மாவிடம் அப்பா கூறியுள்ளார்.

நாளைடைவில் கலைஞருக்கு இது எப்படி தெரிஞ்சதுனு தெரியல. அவர் தான் இசைஞானி என்று பெயர் வைத்தார். 63 நாயன்மார்களில் 60வது சுந்தரர். அவரோட அப்பா பேரு சடையனார். அம்மா பேரு இசைஞானியார். இதனை கலைஞரிடம் நான் சொல்லும்போது, ’தெரிஞ்சு தான் வச்சேன்’ என்றார்.

அப்பாவின் கண்டிப்பு! ilaiyaraaja shares memory about his mother and wife

அப்பா எனது 9 வயதிலேயே இறந்துவிட்டார். அதனால் பெரிய அளவில் அவர் சம்பந்தமான விஷயங்கள் என் மனதில் இல்லை. ஒருமுறை 4 வயது இருக்கும்போது, ’பொய் சொல்லுவியா’ என்று கழுத்தை பிடித்து தூக்கி விட்டார். அதன் பிறகு சினிமாவுக்கு வருகிற வரை பொய்யே சொன்னதில்லை. சினிமாவில் படம் எப்படி இருக்குனு கேப்பாங்க. ரொம்ப நல்லாருக்குனு சொல்லனும்.

ஏம்பா எனக்கு ’டா டா’ இல்லையா? ilaiyaraaja shares memory about his mother and wife

அம்மா 1989ஆம் ஆண்டு மறைந்தார். நான் வீட்டில் பூஜையறைக்கு போய்விட்டு, ஸ்டூடியோவுக்கு கிளம்பும் போது, அம்மாவின் போட்டோ இருக்கும். அதை பார்த்து, டாடா காட்டி விட்டு தான் புறப்படுவேன்.

ilaiyaraaja shares memory about his mother and wife

என் குழந்தைகள் சிறுவயதில், ஸ்கூலுக்கு போகும்போது, ‘மம்மி டா டா, டாடி டா டா’ என சொல்லிவிட்டு செல்வார்கள். அப்போது அங்கிருக்கும் அம்மா, ‘ஏம்பா எனக்கு இல்லையா?’ என்று கேட்பார்கள். உங்களுக்கு என்னமா? நான் சொல்றேன் டாடா” என்று கூறி கிளம்பினேன். அதன்பிறகு பாட்டிக்கும் டாடா சொல்லிவிட்டு தான் பிள்ளைகள் செல்வார்கள்.

அதன் தொடர்ச்சியாக தான், அவர் இறந்த பிறகு, இன்றும் கூட, பூஜையறைக்கு சென்று வெளியே வரும்போது இருக்கும் அம்மாவின் புகைப்படத்திற்கு டாடா காட்டி விட்டு தான் வருவேன்.

போட்டோவில் இருப்பது அம்மா தானே.. அந்த நொடி உண்மை தானே. அதனால் இன்றும் கூட வெளியே கிளம்பும் போது, ‘வர்றேன் மா’ என்று சொல்லிவிட்டு வருகிறேன்” என்று உணர்ச்சிப் பொங்க தெரிவித்தார்.

எனக்கு சின்னதொரு இடையூறும் தந்ததில்லை!

தொடர்ந்து மறைந்த தனது மனைவி ஜீவா குறித்து கூறுகையில், “எனது மனைவி குழந்தைகளை அவர் முழுவதுமாக பார்த்துக் கொண்டு எனக்கு சின்னதொரு இடையூறும் தரவில்லை. “டாடியை டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று குழந்தைகளிடம் மனைவி கூறி விடுவார்கள். என்னுடைய மூன்று குழந்தைகளும் அம்மாவுடைய வழிகாட்டுதலின்படி நடந்து கொண்டன” என்று தெரிவித்தார் இளையராஜா. ilaiyaraaja shares memory about his mother and wife

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share