தமிழ் திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்தும் தனது இசையால் மனங்களை ஈர்த்து வரும் இசையமைப்பாளர் இளையராஜா இன்று (ஜூன் 2) தனது 83-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ilaiyaraaja recevied world birthday wishes today
இதனையடுத்து இன்று காலையில் தனது இல்லத்திற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த ரசிகர்களின் பாராட்டை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “பிறந்த நாள் வாழ்த்து கூற பல இடங்களில் இருந்து வெகு தூரத்தில் இருந்து சிரமப்பட்டு என்னை பார்க்க ரசிகர்கள் வந்துள்ளனர். எனக்கு பிறந்த நாள் கூறிய முக்கிய பிரமுகர்களுக்கும், என்னை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும், சமூகவலைதளங்களில் வாழ்த்து கூறிக் கொண்டே இருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.
லண்டனில் நிகழ்த்திய எனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை என்னுடைய மக்கள் கேட்டாக வேண்டும். உலகம் முழுவதும் நம் பெருமையை சொல்வதைப்போலஅதே ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களை நம் நாட்டிற்கு அழைத்து வந்து அதே சிம்பொனி இசை நிகழ்ச்சியை கொண்டு வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி நம் மக்கள் முன்னிலையில் நடத்தப் போகிறேன், இந்த இனிய செய்தி உலகமெங்கும் பரவட்டும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்கள் ஒவ்வொருவரும் இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதன் தொகுப்பு இதோ :

முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி இளையராஜாவுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
தங்களின் சிம்பொனி இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2-ஆம் நாளுக்காகக் கோடிக்கணக்கான இரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்.
நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழ் இசை ரசிகர்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்திட்ட இசையின் உச்சமான இசைஞானி இளையராஜாவுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
“அன்னக்கிளி உன்னை தேடுது” என்று ஆரம்பித்து, “தினம் தினமும் உன் நினைப்பு” வரை தொடரும் உங்கள் இசை மெட்டுகள், மென்மேலும் தமிழ் மக்களின் உள்ளங்களை வென்றிட வாழ்த்துகிறேன்.

இயக்குநர் பா. ரஞ்சித்
எனை ஆளும் இளையராஜா ❤️❤️❤️ அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்💥💥💥 #HappyBirthdayIlaiyaraaja 🔥

மத்திய இணையமைச்சர் எல். முருகன்
தமிழ்த் திரையிசைக் கலைஞர், என்றென்றும் இளமை பொங்கும் பாடல்களை இவ்வுலகிற்கு அளித்த இசைஞானி இளையாராஜாவுக்கு, எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களது இசை போல தாங்களும், நல்ல உடல் ஆரோக்கியமும், மனம் நிறை மகிழ்வும் பெற்று, நீண்ட ஆயுளோடு பல்லாண்டு வாழ, எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்!

அமைச்சர் அன்பில் மகேஷ்
புது ராகம் படைப்பதாலே நீயும் இறைவனே 🎶🎹
வாழ்வு முழுவதும் தங்கள் இசையோடு பயணிக்கிறோம். நன்றிகள் இளையராஜா சார் 🙏🏽
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
இசையால் உலகைக் கட்டி ஆளும் நமது பாரத நாட்டின் ஈடிணையற்ற பொக்கிஷம், பல உலகச் சாதனைகள் படைத்த இசை மேதை, தலைமுறைகள் கடந்து கோடான கோடி நெஞ்சங்களை இன்றும் தன் இசையால் ஆறுதல் படுத்திக்கொண்டிருக்கும் அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய இசைஞானி திரு.இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
இசை உலகத்தின் என்றைக்கும் ஒரு மணிமகுடமாக ராஜாவாக வாழ்ந்து கொண்டிருக்கும் இசைஞானி அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் மேலும் இன்னும் ஆண்டுகள் அவருடைய திரை உலகப் பணி தொடரவும், இசைக்கு என்றைக்குமே அவர் ராஜாவாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறோம். தேமுதிக சார்பாக இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்ல…
இளையராஜா அண்ணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்
தமிழர்களின் உணர்வுகளுக்கு இசையால் உயிர் கொடுத்த இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து மக்களின் இசை ரசனையை மேலும் மேம்படுத்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இசையமைப்பாளர் தமன்
வாழ்க 🌟
இசையின் கடவுள் 💥
சங்கீத பெருங்கடல் 🙌🏿
இளையராஜா ஐயா ❤️🫶

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்
“இசையின் கடவுள்” இளையராஜாவுக்கு இனிய இசை பிறந்தநாள்
கடந்த ஆண்டு கடவுள் எனது ஸ்டுடியோவிற்கு வருகை தந்தபோது மறக்க முடியாத தருணத்திற்கான சில படங்கள்.. ஆசீர்வாதம் 🙏🏻🎶❤️
நன்றி & லவ் யு ராஜா சார்
🎶❤️🙏🏻❤️🎶