நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள ’மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ படத்தில் அனுமதியின்றி தனது பாடலை பயன்படுத்தியுள்ளதாகவும், அதனை நீக்க கோரியும் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். ilaiyaraaja filed case against vanitha mrs & mr
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கத்தில், அவரே கதாநாயாகியாக நடித்து இன்று (ஜூலை 11) வெளியாகியுள்ள திரைப்படம் ’மிஸ்ஸஸ் & மிஸ்டர்’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடித்துள்ளார். வனிதாவின் மகள் ஜோவிகா படத்தை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், மைக்கேல் மதன காமராஜன் படத்தில் தான் இசையமைத்திருந்த `ராத்திரி சிவராத்திரி’ பாடலை, வனிதா விஜயகுமாரின் படத்தில் அனுமதியின்றி வைத்திருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மிஸஸ் & மிஸ்டர் படத்தில் இருந்து ராத்திரி சிவராத்திரி பாடலை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடாக இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை (ஜூலை 14) அன்று விசாரணைக்கு வரும் என நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு அறிவித்துள்ளது.
