தீபாவளி திருநாளில் இளையராஜா வெளியிட்ட மெகா அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்!

Published On:

| By christopher

ilaiyaraaja announced his next sympony preparation

தனது 2வது சிம்பொனி இசையை எழுதுவது குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் இளையராஜா இன்று (அக்டோபர் 20) வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகை தாண்டி ஒட்டுமொத்த இந்தியா சினிமாவையும் தனது இசையால் ஈர்த்தவர் இளையராஜா. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து புதிய சாதனை படைத்தார்.

ADVERTISEMENT

இளையராஜாவின் இந்த சாதனைக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அவரது 50 ஆண்டுகால பொன்விழாவை கெளரவிக்கும் விதமாக சமீபத்தில் சென்னையில் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தீபாவளி திருநாளில் இளையராஜா புதிய அறிவிப்பை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ADVERTISEMENT

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், “அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள். அம்மாவின் நினைவு தினத்துக்கு செல்கிறேன். இந்த இனிய தீபாவளி நாளில் உங்களுக்கு எல்லாம் இன்னொரு செய்தி சொல்ல விரும்புகிறேன். எனது அடுத்த சிம்பொனி எழுதுவதற்கு, அம்மாவின் நினைவு தினத்தை முடித்து விட்டு வந்து துவங்கலாம் என இருக்கிறேன். இத்துடன் புதிய படைப்பாக ’சிம்பொனிக் டான்சர்ஸ்’ என்ற இசைக்கோர்வையை எழுதுவதாக இருக்கிறேன். இதை உங்களுக்கு தீபாவளி நற்செய்தியாக சொல்கிறேன். நன்றி வணக்கம்” என இளையராஜா கூறியுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share