ADVERTISEMENT

விமானத் துறையில் வேலை பார்க்கிறீங்களா? ஐஐடி மெட்ராஸ் கொடுக்கும் ‘பிரெஞ்சு’ சான்றிதழ்… மிஸ் பண்ணிடாதீங்க!

Published On:

| By Santhosh Raj Saravanan

IITM and ENAC collaborates for aviation safety management training

“பிளைட்ல பறக்குறது எவ்வளவுக்கு எவ்வளவு த்ரில்லிங்கோ, அதைவிடப் பெரிய சவால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்றது!” இந்தியாவில் நாளுக்கு நாள் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், விமானப் பாதுகாப்பு (Aviation Safety) என்பது மிக முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தத் துறையில் இருப்பவர்கள் தங்களை ‘அப்டேட்’ செய்து கொள்வதற்காகவே, சென்னை ஐஐடியின் ‘பிரவர்தக்’ (IITM Pravartak) அமைப்பு ஒரு சூப்பர் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற விமானப் போக்குவரத்துப் பல்கலைக்கழகமான ENAC (Ecole Nationale de l’Aviation Civile) உடன் இணைந்து, புதிய படிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

என்ன படிப்பு?

இதன் பெயர் ‘விமானப் பாதுகாப்பு மேலாண்மை’ (Aviation Safety Management).

ADVERTISEMENT

பொதுவாக விமானத் துறையில் நடக்கும் விபத்துகளைத் தடுப்பது எப்படி? பாதுகாப்பு விதிமுறைகளை (Safety Protocols) எப்படிச் சரியாகக் கையாள்வது? என்பது குறித்து சர்வதேசத் தரத்திலான பயிற்சி இதில் வழங்கப்படும்.

கூட்டணி யாரோடு?

ADVERTISEMENT

ஐரோப்பாவிலேயே விமானப் போக்குவரத்துக்கெனப் பெயர் பெற்ற பல்கலைக்கழகம் ENAC. அவர்களது பாடத்திட்டத்தை, நம்ம ஊர் ஐஐடி மெட்ராஸ் மூலம் வழங்குவதுதான் இதன் ஹைலைட். இது இந்திய விமானத் துறைக்குக் கிடைத்த ஒரு ‘குளோபல் டச்’.

யாருக்கெல்லாம் பயன்படும்?

இது ஃபிரஷர்களுக்கான படிப்பு என்பதை விட, ஏற்கனவே ஃபீல்டில் இருப்பவர்களுக்கானது.

விமான நிறுவன ஊழியர்கள் (Airline Employees), விமான நிலையங்களை நிர்வகிப்பவர்கள் (Airport Operators), விமானப் பராமரிப்புப் பொறியாளர்கள் (MRO Engineers), விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோர் தங்கள் பணித்திறனை வளர்த்துக்கொள்ளவும், அடுத்தக்கட்ட பதவி உயர்வுக்குச் செல்லவும் இந்தப் படிப்பு உதவும்.

ஏன் இப்போது முக்கியம்?

இந்தியாவில் புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம், அவ்வப்போது விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த செய்திகளும் வருகின்றன. இதைச் சரிசெய்ய, முறையான பயிற்சி பெற்ற நிபுணர்கள் (Safety Experts) இந்தியாவுக்குத் தேவைப்படுகிறார்கள். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதே இந்தப் படிப்பின் நோக்கம்.

ஐஐடி மெட்ராஸ் முத்திரை, கூடவே பிரான்ஸ் நாட்டுப் பல்கலைக்கழகச் சான்றிதழ்… இது ரெண்டும் உங்க பயோடேட்டாவில் இருந்தால், விமானத் துறையில் உங்க கிராஃப் எகிறி அடிக்கும். சாதாரண ஊழியராக இருப்பவர்கள், ‘சேஃப்டி ஆபீசர்’ போன்ற உயர் பதவிகளுக்குச் செல்ல இது ஒரு ஏணிப்படியாய் அமையும். வாய்ப்பை நழுவவிடாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share