“ஐஐடிக்குள்ள நுழையறதே பெரிய கனவு… அங்க வேலையும் கிடைச்சா எப்படி இருக்கும்?” இந்தியாவின் நம்பர் 1 கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் (IIT Madras) பணியாற்ற ஒரு வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ முடித்துவிட்டு, “நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கிற மாதிரி ஒரு வேலை வேணும்” என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சரியான சாய்ஸ்.
சென்னை ஐஐடியின் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி மையத்தில் (IC&SR) தற்காலிக அடிப்படையில் ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலை விவரம் என்ன?
- பதவி: ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer).
- காலியிடங்கள்: மொத்தம் 3.
- துறை: சிவில் (Civil).
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கப் பெரிய டிகிரி தேவையில்லை. டிப்ளமோ படித்திருந்தாலே போதும்!
- கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ (Diploma in Civil Engineering) முடித்திருக்க வேண்டும்.
- அனுபவம்: கட்டிட வரைபடங்கள் (Building Drawings) தயாரிப்பதில் குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருப்பது அவசியம்.
- வயது வரம்பு: ஐஐடி விதிகளின்படி நிர்ணயிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் நபர்களுக்குத் தகுதி மற்றும் அனுபவத்தைப் பொறுத்து மாதம் ரூ.16,000 முதல் ரூ.18,000 வரை தொகுப்பூதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
- விசிட் பண்ணுங்க: https://icsrstaff.iitm.ac.in/careers/current_openings.php என்ற இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
- “Junior Engineer” என்ற அறிவிப்பைத் தேர்வு செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- கடைசி தேதி: விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜனவரி 19, 2026. (இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு!).
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (Written Test) அல்லது நேர்காணல் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சம்பளம் கம்மியா இருக்கேனு யோசிக்காதீங்க… பிராண்ட் முக்கியம் பிகிலு!
- எக்ஸ்பீரியன்ஸ் சர்டிஃபிகேட்: ஐஐடி மெட்ராஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்ததற்கான சான்றிதழ் (Experience Certificate) கிடைத்தால், பிற்காலத்தில் எல்&டி (L&T) போன்ற பெரிய கட்டுமான நிறுவனங்களில் வேலை கிடைப்பது சுலபம். இது உங்கள் கேரியருக்கு ஒரு ‘விசிட்டிங் கார்டு’ மாதிரி!
- நெட்வொர்க்: அங்கே இருக்கும் பெரிய பேராசிரியர்கள் மற்றும் ப்ராஜெக்ட் தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். அது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும்.
- லோக்கல் வேலை: சென்னையிலேயே வேலை என்பதால், வெளியூர் அலைச்சல் இல்லை.
ஜனவரி 19ஆம் தேதிக்குள் அப்ளை பண்ணிடுங்க. “கிடைச்சா அதிர்ஷ்டம், கிடைக்காட்டி அனுபவம்!
