கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான செய்தியாளர் சந்திப்பிற்கு முன்பாக, ஐஜி ரம்யா பாரதி உயர் அதிகாரிகளுடன் பேசி சிரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வன்னி அரசு, “நாம் இப்போது பேசுவதற்கு முன்பு கூட நீங்கள் வீடியோ எடுக்கலாம். அவர்கள் செய்தியாளர் சந்திப்பைத் தொடங்குவதற்கு முன்னதாக, வேறு ஒரு விஷயம் குறித்துப் பேசியதாக விளக்கம் அளித்துள்ளனர். அதிகாரிகள் சிரிக்கவே கூடாது என்றால் அது எப்படி முடியும்? காவல்துறையில் இருக்கும் அதிகாரிகள் எப்போதும் முறைத்துக் கொண்டேதான் இருக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது அல்லவா? செய்தியாளர் சந்திப்பு தொடங்குவதற்கு முன்பு அவர்கள் தங்களுக்குள் இயல்பாக உரையாடியுள்ளனர்; இந்த விவகாரம் குறித்துப் பேசவில்லை. எனவே, இதனை ஒரு அதீதமான குற்றச்சாட்டு என்றே நான் கருதுகிறேன்.
காவல்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து நாம் தாராளமாக விவாதிக்கலாம். ஆனால், காவல்துறை அதிகாரிகள் சிரிப்பது குறித்தே பேசுவது எப்படி சரியாக இருக்கும்? அதனால், இது தேவையற்ற ஒரு குற்றச்சாட்டு என்று கூறுகிறேன்.”
இவ்வாறு அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.









