”துரோகம் செய்ய நினைத்தால் வாழ முடியாது” : ஜெயக்குமார்

Published On:

| By christopher

If you want to betray you cant alive: Jayakumar

”எம்.ஜிஆர்., ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ய நினைத்தவர்கள் இன்று கட்சி கரை வேட்டி கட்ட கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் இன்று (டிசம்பர் 26) நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதில் பங்கேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி கழக சட்டத்திட்டத்தின்படி பொதுச்செயலாளராக பதவி ஏற்று முதல்முறையாக வரலாற்று சிறப்புமிக்க அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா பொதுச்செயலாளராக பதவி ஏற்று கட்சியை வழிநடத்தினார்கள். அவருக்கு பின் 2 கோடி தொண்டர்களை அரவணைப்புடன் கட்சியை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

ADVERTISEMENT

எம்.ஜிஆர். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ய நினைத்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அப்படி செய்தவர்கள் இன்று கட்சி கரைவேட்டி கட்ட கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாற்பதும் நமதே என்ற கொள்கையுடன் தேர்தலில் வெற்றிபெற அனைவரும் பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”எடப்பாடி பெயர் சொல்வதற்கு கூட தகுதியில்லாத கத்துக்குட்டிகள்”: சாடிய வளர்மதி

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share