விஜய்யுடன் விமான பயணம்: வதந்திகளுக்கு நாய், சேவலை சுட்டிக்காட்டி திரிஷா பதிலடி!

Published On:

| By Kumaresan M

சமீபத்தில் நடிகர் விஜய், திரிஷாவுடன் தனி விமானத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கோவா சென்றார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மனைவி சங்கீதாவுடன் செல்லாமல் திரிஷாவுடன் விஜய் சென்றது ஏன் ? என்று நெட்டிசன்கள் விமர்சித்திருந்தனர். இணையத்தில் ஜஸ்டிஸ் ஃபார் சங்கீதா என்ற ஹேஸ்டேக்கும் வைரலானது.

இதற்கிடையே, கோவையில் பேசிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை, அந்த வீடியோவை வெளியிட்ட அதிகாரிகளை காட்டமாக விமர்சித்திருந்தார். உளவுத்துறை அதிகாரிகள் திமுக ஐ.டி விங்குக்கு வேலை பார்க்கிறார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

‘விஜய் யார் யாருடன் செல்ல வேண்டுமென்பது அவரின் தனிப்பட்ட விருப்பம். அதில், தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. அந்த வீடியோ திமுக ஐ.டி விங்குக்கு கொடுத்தவர்களை கண்டுபிடிக்கும்படி மத்திய விமானத்துறை அமைச்சகத்துக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடிதம் எழுதப்படும்’ என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.

இப்படி சர்ச்சையாக போய்க் கொண்டிருக்க நடிகை திரிஷா தன் இன்ஸ்டா பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

அதில், மனிதர்களுக்கு நம்மை பிடிக்கவில்லையா? ஒன்றும் பிரச்னையில்லை. நாய்களுக்கு நம்மை பிடிக்கவில்லையென்றால்தான் யோசிக்கனும். அதுவே நம்மை நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் என்று கூறியுள்ளார். மற்றொரு பதிவில் வயதாக வயதாகதான் தெரிகிறது. காலையிலேயே ஏன் சேவல் கூவுகிறது என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் வதந்தியால் தான் எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை என்பதை திரிஷா மறைமுகமாக உணர்த்தியுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

மேலும், திரிஷா காஞ்சிவரம் பட்டு சேலை அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், எத்தனை பேஷன் வேண்டுமானாலும் வரலாம் போகலாம். ஆனால், காஞ்சிவரம் நிரந்தரமானது என்றும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

விடுதலை 2 : விமர்சனம்!

குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு தேதியில் முக்கிய மாற்றம் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share