மக்களவைத் தேர்தல் தற்போது நடைபெற்றால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 324 இடங்களும், இந்தியா கூட்டணிக்கு 208 இடங்களும் கிடைக்கும் என்கிறது India Today Survey.
Mood of the Nation என்ற தலைப்பில் India Today ஊடக நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. தற்போது ஆகஸ்ட் மாத கருத்து கணிப்பு முடிவுகளை India Today வெளியிட்டுள்ளது.
இதில், தற்போது மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டால்
- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 324 இடங்களைக் கைப்பற்றும்; அதன் வாக்கு சதவீதம் 47% ஆக இருக்கும்.
- காங்கிரஸ், திமுகவை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கு மொத்தம் 208 இடங்கள் கிடைக்கும்; இந்தியா கூட்டணியின் வாக்கு சதவீதம் 41% ஆக இருக்கும்.
கடந்த பிப்ரவரி மாதம் India Today நடத்திய கருத்து கணிப்பில்
- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 343 இடங்கள் கிடைக்கும்
- இந்தியா கூட்டணிக்கு 188 இடங்கள்தான் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வாக்கு திருட்டு விவகாரத்தை முன்வைத்து ராகுல் காந்தி தீவிர பிரசாரம், யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்; ராகுல் காந்தியுடன் இந்தியா கூட்டணியும் கை கோர்த்துள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தை ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில்
- பாஜக கூட்டணி 19 இடங்களை இழக்கும்
- இந்தியா கூட்டணி 20 இடங்களை கூடுதலாக பெறும் என்கிறது India Today ஆகஸ்ட் மாத கருத்து கணிப்பு. இதனால் பாஜக கூட்டணி கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன
இந்தியா டுடே கருத்து கணிப்பு முடிவுகள் ஒப்பீடு:

| ஆண்டு / மாதம் | பாஜக கூட்டணி | இந்தியா கூட்டணி | இதர கட்சிகள் |
|---|
| 2024 மக்களவைத் தேர்தல் | 293 | 234 | 16 |
| 2024 ஆகஸ்ட் | 299 | 232 | 12 |
| 2025 பிப்ரவரி | 343 | 188 | 12 |
| 2025 ஆகஸ்ட் | 324 | 208 | 11 |
