மக்களவை (Lok Sabha லோக்சபா) தேர்தல் தற்போது நடத்தப்பட்டால் தமிழ்நாட்டில் எந்த கட்சி வெல்லும் என India Today- C Voter கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் India Today- C Voter தொடர்ந்து கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் India Today- C Voter இணைந்து ‘தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் என்ன?” என 2026 ஜனவரியில் கருத்து கணிப்பு நடத்தி உள்ளது.
தமிழகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில்
இந்தியா கூட்டணி 47%; தேசிய ஜனநாயக கூட்டணி 41% வாக்குகளைப் பெற்றது.
கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் India Today- C Voter நடத்திய கருத்து கணிப்பில்
இந்தியா கூட்டணி 48%; தேசிய ஜனநாயகக் கூட்டணி 37% வாக்குகளைப் பெறும் என கணித்திருந்தது.
தற்போது 2026 ஜனவரி மாதம் நடத்தப்பட்டுள்ள கருத்து கணிப்பில்
இந்தியா கூட்டணி 45%; தேசிய ஜனநாயகக் கூட்டணி 33% வாக்குகளை மட்டும் பெறும் என தெரிவித்துள்ளது.
விஜய்யின் தவெகவுக்கு 15%; இதர கட்சிகளுக்கு 7% வாக்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதிகளின் அடிப்படையில்
இந்தியா கூட்டணி 2024 தேர்தலில் 39 இடங்களையும் கைப்பற்றியது.
2025 ஆகஸ்ட் மாத கருத்து கணிப்பில் இந்தியா கூட்டணி 35-36 இடங்களையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 2-3 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்திருந்தது.
ஆனால் ஜனவரி மாதம் நடத்தப்பட்டுள்ள கருத்து கணிப்பில்
மொத்தம் உள்ள 39 மக்களவை தொகுதிகளில்
இந்தியா கூட்டணி 38 இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 இடத்தில் மட்டுமே வெல்லும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
India Today – C Voter கருத்துக் கணிப்பு (ஜனவரி 2026)
வாக்கு சதவீதம் (Vote Share)
| ஆண்டு | இந்தியா கூட்டணி | (தேசிய ஜனநாயக கூட்டணி) | தவெக (விஜய்) | இதர கட்சிகள் |
|---|---|---|---|---|
| 2024 லோக்சபா தேர்தல் | 47% | 41% | – | 12% |
| 2025 ஆகஸ்ட் கணிப்பு | 48% | 37% | – | 15% |
| 2026 ஜனவரி கணிப்பு | 45% | 33% | 15% | 7% |
தொகுதி அடிப்படையிலான கணிப்பு (39 தொகுதிகள்)
| ஆண்டு | இந்தியா கூட்டணி | NDA |
|---|---|---|
| 2024 லோக்சபா தேர்தல் | 39 | 0 |
| 2025 ஆகஸ்ட் கணிப்பு | 35 – 36 | 2 – 3 |
| 2026 ஜனவரி கணிப்பு | 38 | 1 |
