மகாராஷ்டிரா போல.. தமிழகத்துக்குள் பாஜக வந்தால் அனைத்து இடஒதுக்கீடும் ‘காலி’… ஸ்டாலின் எச்சரிக்கை

Published On:

| By Mathi

Stalin Reservation

தமிழ்நாட்டுக்குள் பாஜக நுழைந்துவிட்டல் அனைத்து சமூகங்களின் இடஒதுக்கீடும் ரத்து செய்யப்படுகிற அபாயம் இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், “ மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பா.ஜ.க!இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள்.

ADVERTISEMENT

அண்மையில் மறைந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார்,2014-இல் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை எடுத்தார்.

அவர் மறைந்த துயரம் அனைவரின் மனதில் இருந்தும் அகல்வதற்குள் அவர் எடுத்த முடிவை நீக்கியுள்ளது சிறுபான்மையினர் வெறுப்பில் ஊறிப்போன பா.ஜ.க.!

ADVERTISEMENT

இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு #AntiMinorityBJP அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா?

தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி!

ADVERTISEMENT

இவர்களுக்கு ஒருநாளும் வளர்ச்சி அரசியல் தெரியாது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான்.

இத்தகைய வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! “தமிழ்நாடா NDA-வா?” எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share