விஜய் மட்டுமா.. அஜித்.. நயன்தாரா வந்தாலும் கூட்டம் வரும்.. சீமான்

By Pandeeswari Gurusamy

|

Published on 14 Sep 2025, 3:27 PM

If Ajith and Nayanthara come, the crowd will come.

விஜய் மட்டுமில்லை.. அஜித், ரஜினி, நயன்தாரா வந்தாலும் கூட்டம் வரும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், இளையராஜா அப்பாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கினால் எங்களுக்கு பெருமை தான். விளையாட்டுத்துறையில் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இசைத்துறையில் இளையராஜாவை விட சாதனையாளர்கள் இதுவரை இல்லை. அதேசமயம் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுத்த மரியாதையை வ.உ.சிதம்பரனார் , பாரதியார் ஆகியோருக்கு தரவில்லை என தனிப்பட்ட முறையில் வருத்தம் இருக்கிறது. சச்சின் டெண்டுல்கரை விட பாரதியாரும், வ.உ.சிதம்பரனாரும் இழிவாக போய் விட்டார்களா என்றார்.

ADVERTISEMENT
இசை இறைவன் இளையராஜா

இளையராஜாவை இசை அமைப்பாளராக பார்ப்பதைவிட நாங்கள் இசை இறைவனாக பார்க்கிறோம். இளையராஜா இசையை அருள்வார். அவரது பெயரில் விருது வழங்குவது எனக்கு பெருமை தான் என்றார். முதலில் அவருக்கு நான் பாராட்டு விழா எடுக்க இருந்தேன். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, அரசு அதனை செய்யும் போது இடையூறு செய்ய வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் மாநில அரசு, பாரதிராஜா போன்ற திரை கலைஞர்களையும் கௌரவப்படுத்தி இருக்க வேண்டும் என்றார்.

நயன்தாரா வந்தால் இரண்டு மடங்கு கூட்டம்

திருச்சியில் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் குறித்த கேள்விக்கு திரையில் பார்த்தவர்கள் வரும்போது கூட்டம் வரத்தான் செய்யும். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களை காண்பதற்கு மணி கணக்கில் காத்திருந்தோம். பிறகு அவர் வராமல் நாங்கள் ஏமாந்தும் போனோம் என்றார். கூட்டம் வரத்தான் செய்யும் சகோதரர் அஜித்தை இறக்கினால் இதைவிட கூட்டம் வரும். ரஜினி வந்தால் கூட்டம் வரும். நயன்தாரா வந்தாலும் இதைவிட இரண்டு மடங்கு கூட்டம் வரும். கூட்டத்தை பார்க்காதீர்கள். முன்வைக்கும் கொள்கைகளை பாருங்கள் என்றார்.

ADVERTISEMENT

மேலும் விஜய்யை இவ்வாறு நிற்க வைத்து இத்தனை மணி நேரம் கேள்வி கேட்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய சீமான், செய்தியாளர் சந்திப்பிற்கு வரவில்லையா என்றால் நேரடியாக கோட்டைக்கு வருகிறேன் என்கிறார் விஜய்” என தெரிவித்தார்.

விஜய்க்கு கூடிய கூட்டம் ஒட்டாக மாறுமா என்ற கேள்விக்கு, விஜய்யை போலவே I am Waiting என பதில் அளித்தார். எதுவாக இருந்தாலும் மே மாதம் தெரிந்து விடும் அதுவரை பொறுத்திருப்போம் என தெரிவித்தார்.

ADVERTISEMENT
விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்பதா?

விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது குறித்தான கேள்விக்கு, அப்படியெல்லாம் எதுவும் கூறவில்லை நீங்களாக எதையும் பேச வேண்டாம்.. நீதிமன்றம் அவ்வாறு கூறியதா? அந்தத் தீர்ப்பை காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel