ICC Ranking: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில்…இந்திய வீரர்கள் அசத்தல்!

Published On:

| By Manjula

icc released rankings top

சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி தரவரிசையில், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்கு தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார். icc released rankings top

இந்திலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின், 2 ஃபைஃபர்களுடன் (5 விக்கெட்டுகள்) 26 விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

icc released rankings top

இதுமட்டுமின்றி, இந்த தொடரின்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500-வது விக்கெட்டை கைப்பற்றினார். அதோடு தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி, அந்த போட்டியில் ஒரு 5-விக்கெட் ஹாலையும் கைப்பற்றி அசத்தினார்.

அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறியதை அடுத்து முதலிடத்தில் இருந்த ஜஸ்பிரித் பும்ரா, 847 புள்ளிகளுடன் 2-வது இடத்தை ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹசல்வுட்டுடன் பகிர்ந்து கொள்கிறார்.

இப்பட்டியலில், ரவீந்திர ஜடேஜா 7வது இடத்தில் தொடர, 15 இடங்கள் முன்னேறிய குல்தீப் யாதவ் 16-வது இடத்தை பிடித்துள்ளார்.

icc released rankings top

பேட்டிங்கில் தொடர் முழுவதும் அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடம் பிடித்துள்ளார். அதோடு 2 இரட்டை சதங்கள் உட்பட 712 ரன்களுடன், ‘தொடர் நாயகன்’ விருதையும் வென்றார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை மிஸ் செய்த கோலி 9-வது இடத்தில் இருக்கிறார். இளம்வீரர் ஜெய்ஸ்வால் கோலியை பின்னுக்குத்தள்ளி 8-வது இடத்தினை எட்டிப்பிடித்துள்ளார்.

icc released rankings top

கேப்டன் ரோகித் சர்மா 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்திலும், 11 இடங்கள் முன்னேறிய இளம்வீரர் சுப்மன் கில் 20-வது இடத்திலும் உள்ளனர். 14 மாதங்களாக விளையாடவில்லை என்றாலும், ரிஷப் பண்ட் இப்பட்டியலில் 15-வது இடத்தை தக்க வைத்துள்ளார். டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில், நியூசிலாந்தின் கனே வில்லியம்சன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

அதேபோல, டெஸ்ட் போட்டிக்கான ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் தொடர்கின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்காத அக்சர் பட்டேல், 6-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

-மகிழ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் வரவு : ராகுல் வாக்குறுதி!

பாஜகவில் இணைந்ததை விமர்சிப்பதா? – சரத்குமார் காட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share