T20 Ranking: முதலிடத்தில் தொடரும் சூர்யகுமார், முன்னேறிய வீரர்கள் யார்?

Published On:

| By Kavi

T20 Ranking: 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக, மே மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

அதேபோல, அமெரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் 3 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. அதுமட்டுமின்றி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 3-0 என மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது. அதேபோல, 2-1 என வங்கதேச அணியை வீழ்த்தி, அமெரிக்கா தொடரை கைப்பற்றியது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையேயான தொடரில், தற்போது வரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், அதில் 2 போட்டிகள் மழையால் ரத்தானது. ஒரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், பேட்ஸ்மேன், பவுலர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்களுக்கான புதிய டி20 தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் 1 இடம் முன்னேறி 7வது இடம் பிடித்துள்ளார்.

அதேபோல, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய பிராண்டன் கிங், அதிரடியாக 5 இடங்கள் முன்னேறி 8வது இடம் பிடித்துள்ளார்.

மற்றோரு மேற்கிந்திய தீவுகள் வீரரான ஜான்சன் சார்லஸ் 17 இடங்கள் முன்னேறி 20வது இடம் பிடித்துள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், இங்கிலாந்தின் ஆடில் ரஷீத் முதலிடத்தில் நீடிக்கிறார். மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த குடகேஷ் மோதி அதிரடியாக 84 இடங்கள் முன்னேறி 27வது இடம் பிடித்துள்ளார். அதே அணியை சேர்ந்த மற்றோரு வீரரான ரோமரியோ ஷெப்பர்ட் 5 இடங்கள் முன்னேறி 29வது இடம் பிடித்துள்ளார்.

இந்திய வீரர்கள் அக்சர் பட்டேல் மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோர் 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ளனர். இதில், ரவி பிஸ்னாய்க்கு டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்-ரவுண்டர்களுக்கான தரவரிசையில், முதலிடத்தில் இருந்த ஷாகிப் அல் ஹசனை பின்னுக்குத்தள்ளி, இலங்கையின் வனிது ஹசரங்கா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்து வீரர் மொயீன் அலி 2 இடங்கள் முன்னேறி 7ஆம் இடம் பிடித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ரோமரியோ ஷெப்பர்ட், 5 இடங்கள் முன்னேறி 11 இடத்தை பிடித்துள்ளார். அதேபோல, பாகிஸ்தான் வீரர் ஜமாத் வசிம் 4 இடங்கள் முன்னேறி 12 இடத்தை பிடித்துள்ளார்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சூர்யா 44 வில்லன் இவரா..? கார்த்திக் சுப்புராஜின் சர்ப்ரைஸ்..!

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்?

T20 World cup 2024: இந்தியாவிற்கு எப்போது போட்டிகள்? முழு அட்டவணை இதோ!

டாப் 10 நியூஸ் : தென்மேற்கு பருவமழை தொடங்குவது முதல் பிரதமர் மோடியின் குமரி வருகை வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share