உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றின் சிறந்த அணி: ஐசிசி அறிவிப்பு!

Published On:

| By Jegadeesh

உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றின் சிறந்த அணியை ஐசிசி இன்று (ஜூலை 10) அறிவித்துள்ளது.

வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் வரை 13 வது உலகக்கோப்பை ஒரு நாள் போட்டிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. அதன்படி மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

ADVERTISEMENT

இந்த தொடரில் பங்குபெறுவதற்கான தகுதியை ஏற்கெனவே இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பெற்றுவிட்டன.
மீதமுள்ள இரண்டு அணிகளை தேர்ந்தெடுப்பதற்கான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்றது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன.

இந்த தொடரின் முடிவில் இலங்கை அணி, நெதர்லாந்து அணி ஆகியவை உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன.

ADVERTISEMENT

அதநேரம் முன்னாள் உலகக்கோப்பை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி வாய்ப்பை இழந்து வெளியேறி ரசிகர்களை ஏமாற்றம் அடையச்செய்தது. மேலும் , இந்த தொடரை நடத்திய ஜிம்பாப்வே அணியும் உலகக்கோப்பை தகுதி சுற்றில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில், ஐசிசி இன்று (ஜூலை 10 ) உலகக்கோப்பை தகுதி சுற்றின் சிறந்த அணியை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இலங்கை அணியின்
பதும் நிஷங்கா மற்றும் நெதர்லாந்து அணியின் விக்ரம்ஜித் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த தகுதி சுற்று தொடரில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்ததன் மூலம் பதும் நிஷங்கா இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஓமன் அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்ததன் மூலமும், இந்த தொடரில் மொத்தம் 326 ரன்கள் எடுத்ததன்  அடிப்படையிலும்  விக்ரம்ஜித் சிங்கிற்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

3 முதல் 5 இடங்களில் முறையே ஸ்காட்லாந்தின் பிரண்டன் மெக்முல்லன், ஜிம்பாப்வேயின் சீன் வில்லியம்ஸ், நெதர்லாந்தின் பாஸ் டீ லீட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஓமன் அணிக்கு எதிராக 136 ரன்கள் எடுத்ததன் மூலம் பிரண்டன் மெக்முல்லன் இந்த அணியில் இடம்பெற்றிருக்கிறார்.

6வது இடத்துக்கு ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசாவும், 7வது இடத்தில் நெதர்லாந்தின் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆகியோரும் தேர்வாகி உள்ளனர். 8 முதல் 11 இடங்களுக்கு முறையே இலங்கையின் வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, ஸ்காட்லாந்தின் கிறிஸ் சோல், ஜிம்பாப்வேயின் ரிச்சர்ட் ங்கரவா ஆகியோரும் தேர்வாகி உள்ளனர்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியது மற்றும் UAE, ஓமன் , அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் வனிந்து ஹசரங்கா இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும், இந்த அணியின் கேப்டன் மற்றும்  விக்கெட் கீப்பராக நெதர்லாந்து அணி வீரர் ஸ்காட் எட்வர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

இந்தியாவில் முதல்முறை: AI தொழில்நுட்பத்தில் கலக்கும் செய்தி வாசிப்பாளர்!

கடலில் பேனா அமைக்க எதிர்ப்பு: மனு தள்ளுபடி!

World Cup Qualifier 2023

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share