ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: அரசு உத்தரவு! 

Published On:

| By Kavi

தமிழகத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை இன்று (செப்டம்பர் 29) பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையகர ஆணையர் அண்ணாதுரை, தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக நிர்வாக இயக்குனராகவும், 

ADVERTISEMENT

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் ஜான் லூயிஸ் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையரக ஆணையராகவும், 

உயர்கல்வித்துறை இணைச் செயலாளர் கற்பகம் பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையராகவும் (கல்வி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share