ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இன்று (ஜூன் 2) தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, தமிழ்நாடு ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் சவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித் சிங் தென்காசி மாவட்ட ஆட்சியராகவும்,
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த சரவணன் பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையராகவும்,
பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) பிருத்விராஜ் கரூர் மாநகராட்சி ஆணையராகவும்
எல்காட் செயல் இயக்குனர் தீபனா விஸ்வேஸ்வரி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராகவும்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன் குமார் கடலூர் மாநகராட்சி ஆணையராகவும்,
கரூர் மாவட்டம் குளித்தலை கோட்டாட்சியர் சுவாதி ஸ்ரீ, திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர்/திட்ட அதிகாரியாகவும்
காஞ்சிபுரம் கோட்டாட்சியர் ஆஷிக் அலி காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர்/திட்ட அதிகாரியாகவும்
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் கோட்டாட்சியர் வினய் குமார் மீனா திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர்/திட்ட அதிகாரியாகவும்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் ஆனந்த் குமார் விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர்/திட்ட அதிகாரியாகவும்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் சிவானந்தம் சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர்/திட்ட அதிகாரியாகவும்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கோட்டாட்சியர் ஆயுஷ் வெங்கட் வாட்ஸ் சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர்/ திட்ட அதிகாரியாகவும்
தேனி மாவட்டம் பெரியகுளம் கோட்டாட்சியர் ரஜத் பீட்டன் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர்/ திட்ட அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதுபோன்று, சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த ராஷ்மீ சித்தார்த் ஜகடே, உயர்கல்வித்துறை சிறப்பு செயலாளராகவும்,
சயின்ஸ் சிட்டி முதன்மைச் செயலாளர் ஹர் சகாய் மீனா நில சீர்திருத்த துறை முதன்மைச் செயலாளராகவும்
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அஜய் யாதவ், பால் உற்பத்தி மற்றும் டைரி மேம்பாட்டு துறை ஆணையராகவும்,
தமிழ்நாடு நுகர்பொருள் சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குனர் விஜயா ராணி தோட்டக்கலை மற்றும் பயிர் தொழில் துறை இயக்குனராகவும்,
தோட்டக்கலை மற்றும் பயிர் தொழில் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன் மாநிலத் திட்டக் குழுவின் உறுப்பினர் செயலாளராகவும்,
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தனசாமி தொழில் கல்வி இயக்குனராகவும்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குனராகவும்,
பால் உற்பத்தி மற்றும் டைரி மேம்பாட்டு துறை இயக்குனர் ஜான் லூயிஸ் தமிழ்நாடு நுகர்பொருள் சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் மேலாண் இயக்குனராகவும்
தமிழ்நாடு சக்கரை கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அன்பழகன் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனராகவும்,
தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விசாகன் சயின்ஸ் சிட்டி துணை தலைவராகவும்
சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குனராகவும்,
நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையர் அனாமிகா, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண் இயக்குனராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.










