உதவி தேர்தல் ஆணையர் பணியிட மாற்றம்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் உதவி தேர்தல் ஆணையர் உட்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், தொழில்துறை கூடுதல் ஆணையராக இருந்த டி.பி.ராஜேஷ், தமிழ்நாடு சுற்றுலாத் துறை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

அரசின் தனிச் செயலாளராக இருந்த சுகந்தி, காகிதம் மற்றும் எழுதுபொருள் கழக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

உதவி தேர்தல் ஆணையராக இருந்த சந்தீப் சக்சேனா, சுற்றுலா மற்றும் கலாச்சார துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

சுற்றுலாத்துறை ஆணையராக இருந்த அமுதவள்ளி தமிழ்நாடு உப்பு கழக நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share