நடிகை ரெஜினா கசாண்ட்ரா ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதையடுத்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சென்னைப் பெண்ணான ரெஜினா, தற்போது அவரது சினிமா வாழ்க்கையில் உச்சபட்சமாக அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதுவரை பெரிதாக எந்த ஒரு நடிகர்களுடனும் கிசுகிசுவில் சிக்காமல் இருந்துவந்த ரெஜினா, தற்போது ஏகப்பட்ட ‘ரிலேஷன்ஷிப்’பில் இருந்ததாக தெரிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சுமன் டிவிக்கு ரெஜினா அளித்த பேட்டியின் போது, சுதீப் கிஷன் மற்றும் சாய் தரம் தேஜ் ஆகியோரை திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்பட்டதே என்ற கேள்விக்கு, அவர்கள் எனக்கு நல்ல நண்பர்கள் மட்டுமே என்றும் வதந்தியை கிளப்புவதில் நம்மவர்கள் வல்லவர்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், எனக்கு பாதுகாப்பு உணர்வை தருபவர் மற்றும் எனது சுதந்திரத்தை மதிப்பவரையே திருமணம் செய்வேன் என்றும் அவர் கூறினார். நான் நிர்ணயிக்கும் தகுதி கொண்ட ஆணை மட்டுமே திருமணம் செய்வேன் என்றும் தான் ஏகப்பட்ட ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், தான் ஒரு ‘சீரியல் டேட்டர்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, அந்த டேட்டிங் பிரச்னைகளில் இருந்து வெளி வந்து விட்டதாகவும், மிகவும் நேர்மையான பெண் என்பதால் தன்னால் உண்மையை மறைக்க முடியாது என்றும் ரெஜினா கூறியுள்ளார். 33 வயதாகும் ரெஜினா இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கல்லூரிக்குள் நுழையாதவர் உருவாக்கிய சாம்ராஜ்யம் … டைம் இதழின் சிறந்த நிறுவனம் அதானி குழுமம்!
மது ஒழிப்பு மாநாடு: அதிமுகவுக்கு விசிக அழைப்பு… ஸ்டாலின் ரியாக்ஷன்!