ADVERTISEMENT

விஜய்யை முதலமைச்சராக்க உயிர் மூச்சுள்ள வரை உழைப்பேன் : செங்கோட்டையன்

Published On:

| By Kavi

விஜய்யை முதலமைச்சராக்க என் உயிர் மூச்சுள்ள வரை பணியாற்றுவேன் என்று முன்னாள் அமைச்சரும் தவெக நிர்வாகியுமான செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று (நவம்பர் 27) விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (நவம்பர் 28) கோவையில் செய்தியாளார்களைச் சந்தித்த செங்கோட்டையன், “எவ்வளவு தடை வந்தாலும் மக்கள் சக்தியாக பிரதிபலித்து 2026ல் விஜய் முதலமைச்சராக அமர்வார். அவரது இயக்கத்தைச் சார்ந்தவர்கள், என்னுடன் உறுதுணையாக இருந்தவர்கள், ஏறத்தாழ 4 மணி நேரம் காத்திருந்து ஒரு தொண்டரான என்னை வரவேற்றார்கள் என்று சொன்னால் எத்தனை கோடி நன்றி சொன்னாலும் அதற்கு ஈடாகாது. வெற்றி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அது மக்கள் சக்தியாக மாறியிருக்கிறது.

தமிழகத்தில் ஒரு மாற்றத்தை, புதிய சமுதாயத்தை, நேர்மையான புனிதமான ஆட்சியை உருவாக்குவதற்கு புறப்பட்டிருக்கிறார் விஜய். மக்கள் சக்தியை எந்த சக்தியாலும் ஒன்றும் செய்ய முடியாது. மக்கள் சக்தி இன்று ஒன்று திரண்டிருக்கிறது.

ADVERTISEMENT

ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருமானம் வந்தாலும் அதை தூக்கி எறிந்துவிட்டு மக்கள் சேவை செய்வதற்காக துணிந்து இந்த இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார்.

உயிர் மூச்சு உள்ளவரை அவரை முதல்வராக்குவதற்கு பணியாற்றுவேன்.

ADVERTISEMENT

எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போது அண்ணாயிசம் என்றால் என்ன என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஒழுகாத வீடு, கிழியாத ஆடை, ஆறாத சோறு என்று சொன்னார். இன்றைக்கு விஜய், எல்லோருக்கும் வீடு, இரு சக்கர வாகனம், வீடு என்று அறிவித்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் முதல் ஜெயலலிதா வரை தமிழகத்தில் புனித ஆட்சி நடைபெற்றது. இப்போது நடக்கும் இந்த இரண்டு ஆட்சியும் மாற்றப்படவேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள்” என்று கூறினார்.

“ என்னை பொருத்தவரை ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். எனக்கு பின்னால் மக்கள் இல்லை என்று சொல்வது சரியல்ல. அதை மக்களே பார்த்துக்கொள்வார்கள்.

மூன்று முறை வாக்கே கேட்காமல் என்னை மக்கள் வெற்றி பெற வைத்திருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.

முன்னதாக செங்கோட்டையன், கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோருடன் சென்னையில் இருந்து இன்று பகல் 12.30 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பிய இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது.

இதனால் விமானம் 1.40 மணிக்கு கோவை வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் செங்கோட்டையனை வரவேற்பதற்காக 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து மாலை விமானம் வந்ததும் அவரை உற்சாகமாக வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share