இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று (மார்ச் 19) சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. Rajinikanth Biopic Dhanush
இதில் இசைஞானி இளையராஜா, நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் வெற்றிமாறன், அருண் மாதேஸ்வரன் மற்றும் தனுஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் தனுஷ் பேசுகையில், ”எண்ணம் போல் வாழ்க்கை. அதை நான் நம்புவதும் உண்டு. அதை அடிக்கடி சொல்லுவதும் உண்டு. நம்மில் பலர் தூக்கம் வரவில்லை என்றால் இளையராஜா பாடல்களை கேட்டு தூங்குவது உண்டு.
ஆனால் நான் பல இரவுகள் இளையராஜா போல் நடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து, நினைத்து தூக்கம் வராமல் தூங்காமல் இருந்திருக்கிறேன்.
Dhanush: நடிக்கும் இளையராஜா பயோபிக்… படத்தின் இசையமைப்பாளர் யார்?
நான் வாழ்க்கையில் இரண்டு பேரோட வாழ்க்கை வரலாறுல நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மற்றொருவர் இசைஞானி இளையராஜா.
ஒன்று நடக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய கர்வத்தை கொடுக்குது. இந்த இடத்திற்கு வர முடிந்தது. இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
நான் இளையராஜாவினுடைய பக்தன் மிகப்பெரிய ரசிகனும் கூட. அவருடைய இசைதான் எனக்கு துணை. இது எல்லோருக்கும் பொருந்தும் என்று நம்புகிறேன்.
Suriya: இப்படி ஒரு படத்தை ‘மிஸ்’ பண்ணிட்டாரே… புலம்பித் தீர்க்கும் ரசிகர்கள்!
அதைத்தாண்டி அவருடைய இசை தான் எனக்கு நடிப்பு ஆசானும் கூட. நடிக்கத் தெரியாத நாள் முதல் இன்றுவரை என்னுடைய நடிப்பு ஆசானாக இருக்கிறது. நான் ஒரு காட்சியை நடிப்பதற்கு முன்னால் அந்த காட்சியின் சூழ்நிலைக்குத் தொடர்புடைய இளையராஜா பாடல்களை கேட்பது வழக்கம்.
அவ்வாறு கேட்கும் போது அந்த காட்சியை எப்படி நடிக்க வேண்டும் என்பதை அந்த இசை எனக்கு சொல்லித் தரும். இவ்வாறு நான் செய்வதை வெற்றிமாறனும் ஒருசில முறை பார்த்திருக்கிறார்.
இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது பெரிய சவாலாக இருக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய பொறுப்பினையும் அளித்துள்ளது”, என்றார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்ற நடிகர் தனுஷின் ஆசை நிறைவேறுமா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-மாணவ நிருபர் கவின்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தாமரை சின்னத்தை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி!
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்!