அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்துதான் பயணித்தேன் என்று தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கிய ஆயுதப்படை காவலர் ஆறுமுகப்பாண்டி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இருந்து பாளையங்கோட்டைக்கு சென்ற அரசு பேருந்தில் காவலர் ஆறுமுகபாண்டி, டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி வைரலானது.
இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களாக அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வரும் நிலையில், அந்த சம்பவத்துக்கு இது பதிலடியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையே, துறை ரீதியான விசாரணைக்கு சென்னை ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சீனிவாசன் முன்பு ஆறுமுக பாண்டியன் நேற்று (மே 24) ஆஜரானார்.
அப்போது, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கிய அவரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போது அவரிடம் செய்தியாளர்கள், அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்தது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், “நடத்துனர் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக வீடியோ பதிவு போட்டுள்ளார். அரசு பேருந்தில் நான் இலவசமாக பயணம் செய்யவில்லை. முறையாக டிக்கெட் எடுத்துதான் பயணம் செய்தேன். அதற்கான ஆதாரமாக டிக்கெட் என்னிடம் உள்ளது. அதிகாரிகள் விசாரணை எதுவும் செய்யவில்லை. எனக்கு உடல்நிலை சரியில்லை” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
#HBD Goundamani : வாழ்க கவுண்டர் ‘மகான்’!
share market: 375% லாபம் கொடுத்து முதலீட்டாளர்களை திக்குமுக்காட வைத்த பங்கு எது தெரியுமா?