‘நிதி நிறுவன கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்றேன்’ – தொழிலாளியின் ஆடியோவால் அதிர்ச்சி!

Published On:

| By Minnambalam Desk

I sold my kidney for loan

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் பகுதிகளில் விசைத்தறி உரிமையாளர்களின் வறுமையை குறி வைத்து சிறுநீரக விற்பனை நடந்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நிதி நிறுவன கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்றதாக கூறும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. I sold my kidney for loan

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த அன்னை சத்யா நகர் பகுதியில் வறுமையின் பிடியில் இருந்த பெண்களை குறி வைத்து சிறுநீரகங்கள் விற்பனை நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த சிறுநீரக புரோக்கர் ஆனந்தன் தலைமுறைவாகிவிட்டார். இதைத்தொடர்ந்து பள்ளிபாளையம் போலீசில் மருத்துவ அலுவலர் வீரமணி கொடுத்த புகாரின் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. I sold my kidney for loan

ADVERTISEMENT

இது குறித்த விசாரணையில் ஒரு பெண்ணிடம் ஆறு லட்சம் பணத்திற்காக புரோக்கர்கள் சிறுநீரக விற்பனை செய்ய வைத்தது தெரியவந்துள்ளது. இதேபோல் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த சிறுநீரக புரோக்கர் மேலும் ஒருவருடன் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் சிறுநீரகம் தேவைப்படுகிறது. 5 லட்சம் கொடுத்து விடலாம். நல்ல ஆளாக இருந்தால் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே சிறுநீரகத்தை விற்பனை செய்த பள்ளிபாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஒருவரின் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பேசும் தொழிலாளி நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்ததாகவும் அந்தக் கடனை அடைப்பதற்காக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிறுநீரகத்தை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதற்காக சென்னையைச் சேர்ந்த நபர் தனக்கு 5 லட்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதற்கு பெண் புரோக்கர் ஒருவர் உதவியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மதுரையில் பரிசோதனை செய்தபோது துணை போலீஸ் சூப்பிரண்டு அங்கு வந்து விசாரணை நடத்தினார். உறவினருக்கு சிறுநீரகத்தை கொடுத்தீர்களா? இல்லை பணத்திற்காக விற்பனை செய்தீர்களா என்று கேட்டார். பணத்திற்காக சிறுநீரகத்தை கொடுத்தால் வழக்கு போட்டு சிறையில் தள்ளி விடுவேன் என்றார்.

ADVERTISEMENT

அப்போது நான் சொந்தக்காரருக்கு தான் சிறுநீரகத்தை கொடுத்ததாக சொன்னேன். என்னிடம் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தகாத வார்த்தையால் பேசி கடனை கொடு என்று கேட்டதால் துணை சூப்பிரண்டு கேட்டபோது பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது. I sold my kidney for loan

இந்நிலையில் நிதி நிறுவன கடனை அடைக்க பெண்ணின் சிறுநீரகம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share