”அவங்கள காதலிக்கிறேன்” கமெண்ட் அடித்த இந்தியர்… கம்மின்ஸின் ‘ரிப்ளை’ இதுதான்!

Published On:

| By Manjula

தன்னுடைய மனைவியை காதலிப்பதாகக் கூறிய இந்திய ரசிகருக்கு, பேட் கம்மின்ஸ் அளித்த பதில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான பேட் கம்மின்ஸ் மனைவி பேக்கி கம்மின்ஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, அவருக்கு காதலர் தின வாழ்த்துகளை கூறினார்.

ADVERTISEMENT

அதில், ”சூப்பர் மாம், மனைவி, என்னுடைய காதலி, ஒரு அலைச்சறுக்கு வீரரும் கூட. அவருக்கு காதலர் தின வாழ்த்துகள்,” என பேக்கிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

அவரின் இந்த பதிவைப் பார்த்த பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் இருவருக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய ரசிகர் ஒருவர் கம்மின்ஸின் இந்த பதிவுக்குக் கீழே, ”நான் ஒரு இந்திய ரசிகர். நான் உங்கள் மனைவியை காதலிக்கிறேன்,” என கமெண்ட் செய்திருந்தார்.

ADVERTISEMENT

இதைப்பார்த்த கம்மின்ஸ் மிகவும் கூலாக,” நான் அவர்களிடம் தெரிவித்து விடுகிறேன்” என பதில் அளித்தார். அவரது இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இருவரின் பதிவையும் பார்த்த ரசிகர்கள், ”உண்மையிலேயே நீங்கள் ஒரு ஜெண்டில்மேன் பேட் கம்மின்ஸ்”, என அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.

பேட் கம்மின்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

கூட்டாட்சிக்கு எதிரானது : ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித் தீர்மானம்!

Photo of author
Manjula
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share