ADVERTISEMENT

80 வயதிலும் காதல்… மேடையில் போட்டுடைத்த பாரதிராஜா

Published On:

| By christopher

வாத்தி திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை சம்யுக்தாவை காதலிக்கிறேன் என்று இயக்குநர் பாரதிராஜா பேசியுள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வாத்தி’ திரைப்படம் வரும் 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

ADVERTISEMENT

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் வெங்கி அட்லுரி இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கிலும் சார் என்ற பெயரில் வெளியாகிறது.

இப்படத்தில் தனுஷுடன் மலையாள நடிகை சம்யுக்தா, சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், ஷாரா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளிவந்த வாத்தி படத்தின் அனைத்து பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த 4ஆம் தேதி சென்னையில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த விழாவில் தனுஷ் பேசிய பேச்சுகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா, நடிகை சம்யுக்தாவை குறிப்பிட்டு குறும்புத்தனமாக பேசியதும் பலரையும் கவர்ந்துள்ளது.

அவர் பேசுகையில், “சம்யுக்தாவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு லவ் பண்ணனும் போல தோன்றுகிறது.

நான் இயக்கிய கடலோர கவிதைகள் படத்தில் ஒரு டீச்சரை அறிமுகப்படுத்தினேன். இப்போது சம்யுக்தாவை பார்க்கும்போது ’அடடா! காலம் தப்பி பிறந்து விட்டேனோ?’ என தோன்றுகிறது.

இப்போதும் ஒன்னுமில்லை. நான் சம்யுக்தாவை காதலிக்கிறேன்” என கூறினார். அத்துடன் முன் வரிசையில் வெட்கத்துடன் உட்கார்ந்திருந்த சம்யுக்தாவை பார்த்து ’ஐ லவ் யூ’ என்று பாரதிராஜா கூற, தனுஷ் உட்பட அரங்கத்தில் இருந்த அனைவருமே சத்தமாக சிரித்தனர்.

தொடர்ந்து தனுஷ் பற்றி பேசிய அவர், “என் இனிய தமிழ் மக்களே என்று நான் பேண்ட் சர்ட்டில் வந்துள்ளேன். ஆனால் தனுஷ் உண்மையான தமிழனாக வேட்டி சட்டையில் வந்துள்ளார். தனுஷ் என்றால் அம்பு. இதுவரை தனுஷ் குறிவைத்த எதுவும் தப்பியதில்லை. தனுஷிடம் ஒரு ஜீவசக்தி இருக்கிறது.

ஜி.வி. பிரகாஷ் கடவுளின் குழந்தை. தனுஷ் சிறந்த கலைஞன். இருவரும் வயதில் சிறியவர்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் அவர்களது காலிலும் விழுந்துவிடுவேன்.” என்று பேசினார்.

கிறிஸ்டோபர் ஜெமா

போதை மருந்து செலுத்தி பாலியல் பலாத்காரம் : திகில் கிளப்பும் விழுப்புரம் ஆசிரமம்

ஆகம குழு : சத்தியவேல் முருகனார் நியமனத்துக்கு இடைக்கால தடை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share