ADVERTISEMENT

“தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டேன்” – அமெரிக்காவில் ராகுல்

Published On:

| By Monisha

இந்தியாவில் தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 6 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். கலிஃபோர்னியாவில் இன்று (மே 31) புலம்பெயர் இந்தியர்களிடையே ராகுல் காந்தி பேசினார்.

ADVERTISEMENT

அப்போது, “இந்திய அரசியல் சாசனம் என்பது மாநிலங்களின் கூட்டமைப்பை கொண்டது. அனைத்து மொழிகளும், கலாச்சாரமும், வரலாறும் இந்திய அரசியல் சாசனத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்-ம் இந்திய அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது.

ADVERTISEMENT

என்னைப் பொறுத்தவரைத் தமிழ் மொழி தமிழர்களுக்கு மிகவும் உயர்வானது என்பதை நான் புரிந்துகொண்டுள்ளேன். தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. அது தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை. ஒரு போதும் தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன்.

பெங்காலி, பஞ்சாபி, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகள் அச்சுறுத்தப்படுகிறது. அது போல தமிழ் மொழியை அச்சுறுத்தினால் அது இந்திய கட்டமைப்பையே அச்சுறுத்துவதாக நான் கருதுகிறேன்” என்று பேசினார் ராகுல் காந்தி.

ADVERTISEMENT

மோனிஷா

”விசாரணை முடியும் வரை காத்திருங்கள்” : மத்திய அமைச்சர் பேட்டி!

மேகதாது அணை விவகாரம்: சிவக்குமாருக்கு துரைமுருகன் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share