‘அம்பானினா யாருனே தெரியாது’- ஆனந்த் திருமணத்தில் பங்கேற்ற கிம் கர்தாஷியன் கூறுகிறார்

Published On:

| By Kumaresan M

இந்தியாவின் முதல் பணக்காரராக முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் மகன் திருமணம் கடந்த ஆண்டு மும்பையில் நடந்தது. I dont know ambani – kim

திருமணத்தை திருவிழா போல விதவிதமான இடங்களில் வெவ்வேறு ஸ்டைகளில் நடத்தினார். இந்திய பிரபலங்கள் மட்டுமல்லாமல் ஹாலிவுட் நடிகர்கைள், பாடகர்கள் பலர் திருமண விழாவில் கலந்துகொண்டார்கள்.இந்த திருமணத்தில் மாடலும் நடிகையுமான கிம் கர்தாஷியனும், அவருடைய சகோதரி குளோயி கர்தாஷியனும் கலந்துகொண்டார்கள். தற்போது, அம்பானியின் திருமணத்துக்கு வந்து சென்றது குறித்து கிம் கர்தாஷியன் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,’ அம்பானி என்றால் யாரு என்றே எங்களுக்கு தெரியாது, ஆனால் எங்களுக்கு தெரிந்த Lorraine Schwartz என்ற டிசைனர் மூலமாக எங்களுக்கு அழைப்பு வந்தது. இவர்தான் அம்பானி குடும்ப பெண்களுக்கு தங்க நகைகளை டிசைன் செய்து கொடுக்கிறார். அவர்தான் எங்களிடத்தில் அம்பானி வீட்டு திருமணத்துக்கு உங்களை அழைக்க விரும்புகிறார்கள் என்று எங்களிடத்தில் கூறினார். எங்கள் நண்பரின் ஆசையை நிறைவேற்றவே அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டோம். அம்பானி வீட்டு திருமண அழைப்பிதலே பல்வேறு பொருட்களுடன் 18 முதல் 22 கிலோ எடை கொண்டிருந்தது.I dont know ambani – kim

அம்பானி மகன் கல்யாணத்தில் கலந்துகொண்ட போது, நான் அணிந்திருந்த வைர நெக்லஸில் இருந்து ஒரு மிகப் பெரிய வைரம் கீழே விழுந்து தொலைந்துபோனது. அந்த வைரம் எங்கே போனது என தெரியவில்லை. எங்கே தேடியும் அது கிடைக்கவில்லை. பல லட்சம் மதிப்புள்ள வைரம் தொலைந்து போனது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ‘

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share