அம்மாவின் கடனை அடைக்கவே நடிக்க வந்தேன்!- நடிகர் சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!

Published On:

| By Kumaresan M

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர். கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் திறமையானவர். அந்த கேரக்டராகவே மாறியும் விடுவார். இப்போது, கங்குவா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்த மாதம் 14 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.

படத்துக்கான புரேமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, தான் நடிகரான விதம் குறித்து கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அவர், “ஒருமுறை எனது அம்மா லட்சுமி, அப்பாவுக்கு தெரியாமல் 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறேன். அதை அடைக்க வேண்டுமென்று என்று என்னிடத்தில் கூறினார். இந்த சமயத்தில் நேருக்கு நேர் படத்தில் நடிக்க மணி ரத்னம் நல்ல ஒரு நடிகரை தேடிக் கொண்டிருந்தார். மணிரத்னம் நான்  அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பேன் என்று கருதி என்னை அணுகினார்.

தொடர்ந்து, அம்மாவின் கடனை அடைப்பதற்காக நேருக்கு நேர் படத்தில் நடித்தேன். அப்படித்தான் தான் நடிப்புத்துறைக்கு  வந்தேன். அம்மா உங்க கடனை நான் அடைத்து விட்டேன் என்று என் அம்மாவிடம் சொல்ல ஆசைப்பட்டேன். சூர்யாவாக மாறியது இப்படித்தான்.  இந்த துறைக்கு வர வேண்டுமென்று விரும்பி வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படம் வெளியானது. வசந்த் எழுதி இயக்கி மணிரத்னம் தயாரித்த ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகர் சூர்யா. இந்தப் படத்தில் விஜய் கதாநாயகனாகவும் சிம்ரன், கௌசல்யா ஆகியோர் ஹீரோயின்களாகவும் நடித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ADVERTISEMENT

எம்.குமரேசன்

“வதந்தியை கிளப்புவர்கள் மெச்சூரிட்டி இல்லாதவர்கள்” : ஜெயம் ரவி காட்டம்!

கோவையில் இருந்து தொடங்கும் கள ஆய்வு : ஸ்டாலின் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share