நான் காங்கிரஸ்தான். விசிக வேட்பாளராக அறிவித்த திருமாவுக்கு நன்றி: ’காட்டுமன்னார்கோவில்’ ஜோதிமணி

Published On:

| By Mathi

VCK Cadudate

காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோதிமணி, தாம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்; தமக்கு வாய்ப்பு கொடுத்த திருமாவளவனுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 8 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் காட்டுமன்னார்கோவில் தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் தாமே வேட்பாளராக போட்டியிடுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

மக்களவை எம்.பி.யாக உள்ள திருமாவளவன், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இதனையடுத்து தமது முடிவை மாற்றிக் கொண்ட திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மூத்த தலித் தலைவர் இளையபெருமாளின் இளையமகன் ஜோதிமணி போட்டியிடுவார் என அறிவித்தார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, காங்கிரஸ் கட்சியில்தான் நான் இதுவரை பயணிக்கிறேன்.. காங்கிரஸ் கட்சியில்தான் காட்டுமன்னார்கோவில் தொகுதியை கேட்டு விருப்ப மனு கொடுத்திருந்தேன். ஆனால் தற்போது திருமாவளவன், விசிகவின் வேட்பாளராக என்னை அறிவித்துள்ளார். இது தொடர்பாக என்னுடன் யாரும் பேசவில்லை. இருந்தாலும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share