ஜெயலலிதாவின் சொத்துக்கு போட்டியாக வந்த புது அண்ணன்!

Published On:

| By christopher

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் நான் தான் என்று கூறி, கர்நாடகாவைச் சேர்ந்த 83 வயது முதியவர் தாக்கல் செய்துள்ள மனு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனைத்தொடந்து அவரது சொத்துக்கு நான் தான் வாரிசு, சொந்தக்காரர் என பல்வேறு நபர்கள் சமூகவலைத்தளங்களில் உரிமை கொண்டாடி வருகின்றனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பான வழக்குகளில் சில உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தான் ஜெயலலிதாவின் அண்ணன் என்று புதிதாக வாசுதேவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

கர்நாடக மாநிலம் மைசூர் வியாசரபுராவைச் சேர்ந்த 83 வயதான வாசுதேவன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ”ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவி ஜெ.ஜெயம்மாவின் ஒரே மகன் நான் மட்டும் தான். தந்தை ஜெயராமின் இரண்டாவது மனைவி வேதவல்லி என்ற வேதம்மாவுக்கு, ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் பிறந்தனர்.

ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே சகோதரர் ஜெயக்குமார் இறந்துவிட்டதால், சகோதரன் என்ற முறையில் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு என்பதால் தனக்கு ஜெயலலிதாவின் சொத்துகளில் பாதியை தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் தான் உயிருடன் இருப்பதை மறைத்து ஜெயக்குமாரின் மகள், மகனான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதனால் 2020ம் ஆண்டு தீபா, தீபக்கை ஜெயலலிதாவின் வாரிசு என்று பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பட்டியலிடுவது தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கடலில் பேனா வைத்தால் உடைப்பேன்: சீமான் ஆவேசம்!

இந்திய பொருளாதாரம் எப்படி உள்ளது?: ஆய்வறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share