கும்பகோணம் ஐங்கரன் காபி: பெயருக்கு தடை!

Published On:

| By Balaji

ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி என்ற பெயரில் உணவகம் நடத்தத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் ஐங்கரன் காபி என்ற பெயரில் சென்னை, கும்பகோணம் உட்படத் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டீ காபி ஸ்டால் மற்றும் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனைத் தடுக்கும் பொருட்டு, கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகத்தின் பங்குதாரர் ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். “கும்பகோணம் ஐங்கரன் காபி என்ற பெயரில் எங்களுக்குச் சொந்தமான 35 கடைகள் செயல்பட்டு வருகின்றன. கும்பகோணம் ஐங்கரன் காபி என்பது எங்களது வர்த்தக முத்திரை ஆகும். காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இதற்காக உரிமம் பெற்றுள்ளோம். இதன்படி, கும்பகோணம் ஐங்கரன் என்ற பெயரில் வேறு யாரும் உணவகம் மற்றும் கடைகளை நடத்த முடியாது. ஆனால், ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகம் என்ற பெயரில் தஞ்சாவூர் கீழவாசல் மார்க்கெட் சாலையில் தமிழ்செல்வி என்பவரும், தஞ்சாவூர் வடக்குத் தெருவில் அகிலாண்டேசுவரி என்பவரும் உணவகம் நடத்தி வருகின்றனர். இது எங்களது வர்த்தக உரிமைக்கு எதிரானதாகும். எனவே, அவர்கள் ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்தத் தடை விதிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இன்று (மே 18) இந்த வழக்கை விசாரணை செய்தது நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அமர்வு. தஞ்சாவூர் கீழவாசல் மார்க்கெட் சாலை, வடக்குத் தெரு ஆகியவற்றில் ஸ்ரீ கும்பகோணம் ஐங்கரன் காபி உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்தத் தடை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி. இது தொடர்பாக அதனை நடத்தி வருபவர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.

திண்டுக்கல் தலப்பாகட்டி உட்படத் தமிழகத்தின் முன்னணி உணவு தயாரிப்பு மற்றும் உணவக நிறுவனங்களின் பெயர்கள் வேறு நபர்களால் பயன்படுத்தப்பட்டபோதும் இதேபோன்று காப்புரிமை பிரச்சினை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

.

.

ADVERTISEMENT

**

மேலும் படிக்க

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://minnambalam.com/k/2019/05/18/7)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://minnambalam.com/k/2019/05/17/84)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://minnambalam.com/k/2019/05/17/53)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://minnambalam.com/k/2019/05/17/27)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://minnambalam.com/k/2019/05/18/52)

**

.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share