கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

Published On:

| By Balaji

இன்று (செப்டம்பர் 5) பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு எந்த நேரத்தில் கிரிவலம் மேற்கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று பகல் 12.09 மணிக்குத் தொடங்கி மறுநாள் பகல் 12.49 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதை முன்னிட்டு தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். எனவே, சேலத்தில் இருந்தும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் மக்கள் எளிதாகத் திருவண்ணாமலை சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இன்று காலை 10 மணி முதல் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 60 சிறப்பு பேருந்துகளும், சேலம் மண்டலத்துக்குட்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து 90 சிறப்பு பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. இந்த வசதியைப் பயன்படுத்தி மக்கள் பாதுகாப்பாக கிரிவலம் சென்று வர வேண்டும் என்று போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share