கிச்சன் கீர்த்தனா: கறிவேப்பிலை தொக்கு!

Published On:

| By Balaji

**தேவையான பொருள்கள்**

கறிவேப்பிலை – ஒரு கட்டு

ADVERTISEMENT

இஞ்சி – சிறு துண்டு

புளி – சிறிதளவு

ADVERTISEMENT

கடலைப்பருப்பு – சிறிதளவு

உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

ADVERTISEMENT

மிளகு – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – ஆறு

சீரகம் – ஒரு டீஸ்பூன்

வெந்தயம் – சிறிதளவு

கடுகு – சிறிதளவு

தனியா – சிறிதளவு

உப்பு – தேவைகேற்ப

நல்லெண்ணெய் – தேவையான அளவு

**செய்முறை**

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், வெந்தயம், தனியா ஆகியவற்றை லேசாக எண்ணெய் ஊற்றி வறுத்து, ஆறியதும் பொடி செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி புளி சேர்த்து வதக்கவும். அதில் கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து வதக்கி ஆறியதும், தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அதில் அரைத்த விழுது, பொடி செய்தவை, உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறு தீயில் வைத்து சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றி வதக்கவும்.

கறிவேப்பிலை பச்சை வாசனை போய், தொக்கு போல் வந்தவுடன் எடுத்து வைத்துக்கொள்ளவும். பத்து நாள்கள் வரை பயன்படுத்தலாம்.

இந்த தொக்கை இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் தயிர் சாதத்துடன் சாப்பிடலாம். சூடான சாதத்தில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்தும் சாப்பிடலாம்.

**கீர்த்தனா சிந்தனைகள்:**

கடனை வாங்கிட்டு உள்ளூர்லயே கூச்சமில்லாம சுத்துனா கடன்காரன். கடனை வாங்கிட்டு வெளிநாடு போய் கூச்சமில்லாம சுத்துனா பணக்காரன். அவ்வளவுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share